ஜெயஹரி ,ரூபன்
உலகசுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளின் கீழ் விழிப்புணர்வு ஊர்வலம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பட்டிருப்பு சந்தி வரை சென்று இராசமாணிக்கம் மண்டபத்தில் முடிவடைந்தது.
தொடரந்து பொதுமக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயற்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலும் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலா அவர்களின் தலமையில் களுவாஞ்சிக்குடிபதில் பொலிஸ் நிலையபொதுப்பதிகாரி என்.டீ.அபுபக்கர் அவர்களின் தலமையில் புகைத்தல் மதுபாவனையை குறைப்போம் எனும் கருப்பொருளில் கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது மேற்படிநிகழ்வுகளில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சு10ழல் சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சதிஸ்குமார் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பட்டிருப்புபாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் கருத்தரங்கு நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச சபைசெயலாளர் திருமதி.யா.வசங்தகுமாரன் பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம் சுகாதாரவைத்திய அத்தியட்சகர் சுகுணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியi குறிபபிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக