செவ்வாய், 28 நவம்பர், 2017

தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசலையின் வருடாந்த விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலத்தில் 28.11.2017) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் என்.துரைராஜ்   தலைமையில் ஆரம்பமானது.
Share:

தொடர்மழையால் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச சபை உடனடி நடவடிக்கை.


(பழுகாமம் நிருபர்)
தொடர்ந்து பெய்துவரும் மழையால் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பபட்ட பல கிராமங்களின் உள்வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடுவதற்கு வடிகான்கள் இன்மையால் அனைத்து மழைநீரும் வீதிகளில் தேங்கி நின்றமையால் மக்கள் போக்குவரத்திற்கு
Share:

திங்கள், 27 நவம்பர், 2017

எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறுவெட்டு வெளியீடு.


தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும், வெள்ளிச்சரம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சி.தணிகசீலன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தலைவர்சட்டத்தரணி மு.கணேசராசா  தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தனிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிராசா  அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான  சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற இருக்கின்ற நிகழ்வில் பேராசிரியர் மா.செல்வராசா முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம்  மற்றும் இலக்கியவாதி உடுவை ளு. தில்லைநடராசா ஆகியோர் முன்னிலை வகிக்க கலாநிதி க.பிரேமகுமார், சிரேஸ்ட்ட விரிவுரையாளா , முன்னால் உபவேந்தர்;, கிழக்குப் பல்கலைக்கழகம், கலாநிதி க.இராஜேந்திரன், சிரேஸ்ட்ட விரிவுரையாளர், முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம், வைத்திய நிபுணர் க.அருளானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,எந்திரி.ந.சிவலிங்கம், மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம,; மட்டக்களப்பு,வைத்தியர் கு.சுகுணன்;,  வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை;,கலாநிதி சு.சிவரெட்டினம்;, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,, .சுரேஸ் ஜெயப்பிரபா, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், சோ.ஜெகநாதன், துறைத்தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம்,மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால்,சைவப் புரவலர்.வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோருடன் புத்திஜீவிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த கவிதை வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரையினை சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், பீடதிபதி, காயத்திரிபீடம் மட்டக்களப்பு  வழங்க இருக்கின்றார்.

இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் முகமாக கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பின் முதுபெரும் கலைஞர்களாக விளங்கும் மாஸ்ட்டர் சிவலிங்கம், கவிஞ்ஞர் வாகரைவாணன், கலாபூசணம் கவிஞ்ஞர் தேனூரான் ஆகியோர் கௌரவித்து பாராட்டப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை ச.இன்பராசன், உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொகுத்து வழங்க, இந்த நிகழ்வில் அறிமுக உரையை க.மோகனதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்கள் தொடர ஆய்வுரையினை கலாநிதி எஸ்.அமலநாதன், மேலதிகச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு அன்புக்குரிய ஊடகவியலாளர்கள்,ஆர்வமுள்ளவர்கள், கலைஞர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த முயற்சிக்கு ஊக்கம்தந்து உதவுமாறு அனைவருக்கும் ஆசிரியர் தயவான அழைப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா!
Share:

சனி, 25 நவம்பர், 2017

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை விளையாட்டு விழா


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று 25.11.2017) பி. 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் த.விமலானந்தராஜா  தலைமையில் ஆரம்பமானது.
 
இவ் விளையாட்டு விழாவின் பொது பாலர் பாடசாலை மாணவமாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சி,தாரா நடைபூக்கோர்தல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கலந்து சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.






Share:

புதன், 22 நவம்பர், 2017

"முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்"

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அத்துடன் இளைஞர் கழகங்கள் ஊடாக பல கிராமிய விருத்திகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கிடையே சர்வதேச உறவுகளையும் ஏற்படுத்தி இளைஞர் வேளைத்திட்டங்களை வழுப்படுத்தி வருகின்றது.
Share:

திங்கள், 20 நவம்பர், 2017

இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி. பழுகாமம் இளைஞர்கள் தெரிவிப்பு

பல வருடங்களின் பின்னரும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்களின் பின்னர் உள்ராட்சி தேர்தல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்புமுறைத்தேர்தலாக நடாத்தப்படவுள்ளது.
Share:

வெள்ளி, 17 நவம்பர், 2017

தேற்றாத்தீவு வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம் உதயம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வடக்கு தேற்றாத்தீவு கிராம சங்கம் அமைக்கும் நிகழ்வு தேற்றாத்தீவு வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பல்தேவை கட்ட மண்டபத்தில் வடக்கு தேற்றாத்தீவு கிராமசேவகர் சுரேஸ்காந்தாவின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் காமினி இன்பராஜா தலைமையில் இடம் பெற்றது.


இதன் போது தேற்றாத்தீவு  வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிருவாக தெரிவு இடம் பெற்றது அந்த வகையில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக அ.சியாணுயனும் தலைவராக பே.கிரிசாந்னும் பொருளாராக செ.ஸிந்தூரனும் உபதலைவராக க.நேசகுமாரும் உபசெயலாளரா கோகுலன் அவர்களும் தெரிவாகியுள்ளர். மேலும் உறுப்பினர்களாக ஜோன் சஞ்சீவ், டனிஸ்கரன், தபோசன், மா.கம்பதாசன், சத்தியசீலன்,நவகுமார் பாணுஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்மை குறிப்பிட தக்கவிடயம்




Share:

தேற்றாத்தீவு மாங்காடு எல்லை விவசாய வீதி திறந்து வைப்பு


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு மாங்காடு மேட்டு நில பயிர் செய்கையாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட கொங்கிட் வீதி திறப்பு விழா இன்று (17.11.2017 வெள்ளிக்கிழமை) ஒய்வு பெற்ற தபால் அதிபர் சோ.கணபதிப்பிளை தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் க.லெட்சுமிநாதன் பிரதம அதிதியா வருகை தந்து சம்பிரதாயரீதியாக திறந்து வைத்தார்


மேலும் இவ் நிகழ்விற்கு தேற்றாத்தீவு மாங்காடு கிராம சேவையாளர்கள் ஆலயங்களின் தர்மகத்தாக்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பயன் பெறும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கவிடயம்






.
Share:

புதன், 15 நவம்பர், 2017

மட்டக்களப்பில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் இல்லை மக்கள் பீதியடைய வேண்டாம் - அ.மு.நிலையம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற் கரையோததை அண்டிய பகுதியில் சுனாமி வரப்போகின்றது என்கின்ற பீதி புதன் கிழமை (15) முற்பகல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நிலமையும் காணப்படுகின்றது. கரையோரதில் அமைந்துள்ள கிணற்று நீர் திடீரென வற்றியுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது.
Share:

திங்கள், 13 நவம்பர், 2017

கிழக்கிலங்கை இந்து எழுச்சி விழா 2017


கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதமிழ் இந்து எழிச்சி விழா 2017.

இருமருங்கும் குளங்கள் எங்குசென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்துபோகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு,நல்லமனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.
கிழக்கில் தொன்று தொட்டு இந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உலகறியச் செய்வதனையும்;, எமது கலாசார விழுமியங்கள்,கலை, பாரம்பரியங்களை, உலகறியச் செய்வதனையும் நோக்கமாகக் கொண்டு, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் போராதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்கு படுத்தலில் நிக் அன்ட் நெல்லி ஸ்த்தாபனத்தாரின் அனுசரணையில் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் 'கிழக்க்pன் இந்து எழுச்சிவிழா 2017'கார்த்திகை 12ம் திகதிவெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலயங்களின் பிரதமகுருமார்கள்,கல்விப்புலத்து புத்திஜீவிகள்,அரசதிணைக்கள அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,சமயமற்றும் சமுகத் தலைவர்கள், இளைஞர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இந் நிகழ்வில் கலந்து இந் நிகழ்வை எழுச்சியுறவைத்தi மகிழக்கில் ஒருவரலாற்று பதிவாகப் பார்க்கப்படுகின்றது.

இங்கு இந்துக் கலையூடாக எமது பாரம்பரியம், நம்பிக்கை, வாழ்க்கைமுறை, வழிபாட்டு முறை என்பனவற்றினை பரதம், காவடி, செம்புநடனம், கரகம், கூத்து என கிராமத்து கலைகளுக்கு மூச்சுக்கொடுத்த எழுச்சிவிழாவாகவும், இந்தமாணவர்கள், இளைஞர்களின் மண்டிக்கிடந்ததிறமைகளைமன்றத்தில் ஏற்றிய உற்சாக எழுச்சி விழாவாகவும் இதனைப் பார்கலாம். இந்தநிகழ்வுகள் பலவற்றை போராதீவுப் பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.
'இந்து, இந்துவேதம், இந்து இலக்கியம் மற்றும் பண்பாடு,இந்துவாழ்க்கைமுறை,தமிழ் மொழி, என்பவையெல்லாம்..... மாற்று மதத்தினராலும், மாற்று இனத்தினராலும், வேற்றுநாட்டவரினாலும் பல்வேறுவகையாகத் தாக்கி! தகர்த்துத் தகர்த்து, கணிசமான அளவு தவிடுபொடியாக்கிவிட்டு,தரையோடுதரமட்டமாக்கிக் கொண்டு இன்னும் சிறிதுகாலத்தில் இருந்த இடமே இல்லாமல் போய்விடும் என்றநிலைவளர்ந்து,வளர்த்து,வளக்கப்பட்டு,வளப்பட்டு,வலிமைப்பட்டுஅடக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலே இந்தநிகழ்வுபற்றியஎண்ணம் எம்மிடையேஊற்றுப்பெற்றது.'என இச்சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தனதுதலைமையுரையில் குறிப்பிட்டார்.

எமதுபிரதேசத்தின் பெரும்பாலானசமுதாயவாதிகளும்,அரசியல்வாதிகளும் பல்வேறுவகையானகாரணகாரியங்களால் இந்துதர்மத்தினை, நம்பிக்கையினைமதிக்கமுடியாதவர்களாக,போற்றிபேணிப்பாதுகாக்கமுடியாதவர்களாகமாறியுள்ளகாரணத்தினால் இந்துக்களின் உரிமைகளும்,பெருமைகளும்,ஒப்புயர்வற்றதனித்தன்மைகளும், ஏனைய இனத்தினரால் சிதைக்கப்பட்டுசிதையவும்,சிறுமைப்படுத்தப்பட்டுசிறுமையுறவும்,கொடுமைப்படுத்தப்பட்டுநலிந்துமெலியவும் நேரிட்டுள்ளது!.
இவற்றில் இருந்துஎழுச்சிபெறவே இந்தநிகழ்வுகாலத்தின், இனத்தின் தேவைகருதிஒழுங்குசெய்யப்பட்டதுஎன்றசெய்தி இங்குஅனைவரினாலும் அறைகூவப்பட்டது. இவற்றால் இனிமேல் நாத்திகரும்,பகுத்தறிவாதிகளும்,சீர்திருத்தவாதிகளும்,கண்மூடித்தனமாகவும்,காட்டுமிராண்டித்தனமாகவும்,தமிழ் இந்துமதத்தினையும், இந்துக்களின் வாழ்வியலையும், இழித்தும் பழித்தும், நகைத்தும், பகைத்தும்,கிண்டல் செய்தும் கேலிபேசியும்,பேசித்திரிவது, தடுக்கப்பட்டுவிட்டது எனநம்பிக்கை கொள்ளலாம்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் துறைத்தலைவருமான சோ.ஜெகநாதன், கோட்டைக்கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றபு. பாலச்சந்திரன், தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅமைச்சின் மனிதவள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,அத்துடன் முன்னால் மாகாணசபைஉறுப்பினர்,நா.கிருஷ்ணபிள்ளைஆகியோர் அதிதிகளாககலந்துசிறப்பித்தமைகுறிப்பிடத்தக்கது.

இங்குநிகழ்வுகளாக இச்சபையினரால் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காகநடாத்தப்பட்ட இலவசகல்விக் கருத்தரங்கில் சித்திபெற்றமாணவர்கள், அவர்களுக்கானஅதிபர் ஆசிரியவர்கள், வளவாளர்கள், பெற்றோர்கள் பாராட்டிவைக்கப்பட்டனர். அதுபோல் 15 அறநெறிப்பாடசாலைகளை தேர்ந்துஅவர்களுக்கானபண்ணிசைப் போட்டிவைக்கப்பட்டுஅதில் கலந்துகொண்டுவெற்றியீட்டியவர்களுக்குபாராட்டிபரிசுவளங்கும் நிகழவும் நடைபெற்றது.
அத்துடன் பு.பாலச்சந்திரன் உதவிக்கல்விப் பணிப்பாளர் அவரதுசேவையைமெச்சிபொன்னாடைபோற்றிகௌரவிக்கப்பட்டமையும் அங்குமுக்கியமாக இடம்பெற்றதுடன். புலஎழுச்சிபெறும் கலைநிகழ்ச்சிகளைஉள்ளகஅலுவல்கள்,வடமேல் அபிவிருத்திமற்றும் கலாசாரஅலுவல்கள் அமைச்சின் போராதீவுப்பற்றுகலாசாரமத்தியநிலையத்தின் ஒழுங்குபடுத்தலில்மற்றும் தயாரிப்பில் பலகலைதரம்வாய்ந்தகலைநிகழ்வுகளைஅரங்கேற்றிஎமதுபண்பாட்டைபறைசாற்றியமைஎல்லோரையும் உணர்ச்சிவசப்படுத்தியதுஎழுச்சிபெறவைத்தது.
இதற்குமேலாகஅதிதிகள் உரையில் எழுச்சிதொனிக்கும் வகையில் 'நாமார்க்கும் குடியல்லோம் நரகத்தில் இடர்படோம் நமனைஅஞ்சோம்'எனஅப்பர் கூற்றைஅடியொற்றிநாங்கள் நரகத்தில் இடர்பட்டதுபோதும்,அதில் இருந்துஎழுச்சிப் பெறும் சரியானதருணம் இது என்றுதொடங்கியஉதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள்  மேலும்,'இங்கு இந்துமதம்(நம்பிக்கை) தான் உலகம் பூராகவும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்குமுன்னமே இருந்திருக்கிறதுஎன்பதற்கானசான்றாதாரங்கள் உண்டு. எமதுமதம் சனாதனதர்மம் எனஅழைக்கப்படுகின்றதுஏனெனில் அதுஆதியும் அந்தமும் இல்லாதஒன்று. அதற்குபெயர்கூட இருக்கவில்லைஆனால் பின்னாளில் திரிபுபெற்றுபலமதங்கள் தோற்றம் பெற்றதன் பின்னர்தான் அவற்றில் இருந்துவேறுபடுத்திக் காட்ட இந்துக்கள் எனஅழைக்கலாயினர்.'எனவும் மேலும்,
இந்தமதம் தன் உலகம் பூராகவும் பரவி இருந்திருக்கிறதுஅதெப்படிஅதற்குதான் நாகர் சுவாமிகள் கல்வெட்டுசரித்திரசான்றுகள் எல்லாம் சொல்லி இருக்கிறார்.எகிப்தில் ஒருஒப்பந்தத்தில் மித்திரவர்ணசாட்சியாகஎனஅந்தமன்னன் கையொப்பம் இட்டுள்ளதுகி.மு 1300க்கு முன் உள்ளஆதாரம் ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மெச்சிக்கோவில் இன்றும் நவராத்திரிவிழாகொண்டாடப்படுகின்றது. அவுஸ்த்திரேலியபழங்குடியினர் இன்றும் சிவாடான்ஸ் எனஒருநிகழ்வைநிகழ்த்திவருகின்றனர். இப்படிதொலைத் தொடர்பு,போக்குவரத்துவளராதகாலத்திலேயே இந்துமதம் அங்கெல்லாம் இருந்திருக்கிறது. இந்தவம்சத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள். அதைநினைத்துபெருமைகொள்ளவேண்டும்'. எமது இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும்,ஒருத்தருக்குஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவேண்டும்,சுயநலமற்றபொதுத்தொண்டில் இளைஞர்கள் அதிகஅதிகம் ஈடுபட்டுஎமதுபண்பாட்டை இயன்றவரைகட்டிக்காக்கவேண்டும்'எனஉருக்கானஒருஎழுச்சியுரையைஉதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் நிகழ்த்தினார்.

'எமது இந்துக் கலாசாரம் ஆலயங்களில்,பாடசாலைகளில் மற்றும் குடும்பங்களில் இருந்துஆரம்பிக்கப்படவேண்டும். அத்துடன் ஏனைய மதத்தில் தங்களுடையநடவடிக்கைகளைசெம்மைப்படுத்தகட்டுப்படுத்தபொதுச்சபைகள் இருப்பதுபோல் எமதுமதத்தில் இல்லை,அவ்வாறானஒருஉறுதிவாய்ந்தஅமைப்பினைகட்டியெழுப்பவேண்டும்.'எனசிரேஸ்ட்டவிரிவுரையாளர் சோ.ஜெகநாதன் குறிப்பிட்டார்.

'நாம் பண்பாட்டின் தாயும் தகப்பனுமாக இருக்கின்றஎமதுமொழி,நம்பிக்கைஎன்பனபலரைகவர்ந்துஅவர்கள்பின்பற்றுகின்றவேளைநாம் அவற்றைமறந்துவருகின்றோம்;. ஓற்றுமைகுலைந்துள்ளது. பாரம்பரியம் குலைந்துவருகின்றது. ஆனால் அதைதூக்கிநிறுத்தும் இந்தசபையினரின் செயற்பாடுபெரியஆறுதலைதந்துள்ளது. இவர்கள் சமயத்தோடுகல்வியை,சமயத்தோடுவாழ்வாதாரத்தை,கலையை,ஒற்றுமையைபலகோணத்தில் கட்டியெழுப்பிவருவதுபெருமைப்படுத்தNவுண்டியது.'ஏனபு.பாலச்சந்திரன் ஓய்வுபெற்றகோட்டைக்கல்விஅதிகாரிகுறிப்பிட்டார்.
ஆக குறைகளைச் சுட்டிக்காட்டிநிறைவடையச் செய்யும் செயற்பாட்டாளர்களைதுறைசார் தேர்ச்சிபெற்றவர்கள் மூலம் எதிர்காலவளர்ச்சிக்காகஅறைகூவியஎழுச்சி,உலகத்தவரேபோற்றும் எமது இந்துதமிழ் பண்பாட்டைபடடிதொட்டிஎங்கும் தூசிதட்டியஎழுச்சி,அருகிப் போகும் அருமருந்தபண்பாட்டைமீட்டெடுப்பதற்கானஎழுச்சியாக இந்தஒட்டுமொத்தநிகழ்வுஅமைந்திருந்ததுமகிழ்ச்சியைத் தருகின்றது. 
'எழுமின் விழிமின் குறிசாரும் வரைநில்லாதுசெல்மின்'சுவாமி விவேகானந்தர்.








































Share:

சிறப்பாக இடம்பெற்ற சித்தாண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்றைய தினம் அமைப்பின் தலைவர் முரளிதரன் தலைமையில் வரலாற்று புகழ் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் முன்றலில் இடம்பெற்றது.
Share:

சனி, 11 நவம்பர், 2017

தேசிய கலை இலக்கியப்பெருவிழா ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்

மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலக தேசிய கலை இலக்கியப்பெருவிழாவானது பிரதேச செயலாளர்  வா. வாசுதேவன் அவர்களின் தலைமையில் நேற்று (10.11.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பிரதேச செயலகத்தில்  கலாசார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.



இந்நிகழ்வில் விரிவுரையாளர்  சீவரெட்ணம் கலாச்சார இணைப்பாளர்  ஜெயினுலாப்தீன் பிரதேசசெயலக திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர் கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தர் கலாசார உத்தியோகத்தர்கள் இலக்கியவாதிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.









Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate