வெள்ளி, 30 மார்ச், 2018

இன்று பெரிய வெள்ளிக்கிழமை! மட்டக்களப்பு தேற்றாத்தீவு தேவாலய சிலுவைப் பாதை


மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (30.03.2018) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு தேவாலயத்தை வந்தடைந்தது.

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள் மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.
திருச்சிலுவைப்பாதையானது காலை 6.15 மணியளவில் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ்அசீசியார் தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை காலை 9.00 மணியளவில் சென்றடைந்தது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Share:

வெள்ளி, 9 மார்ச், 2018

ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் தேற்றாத்தீவில் இடம் பெற்ற மகளிர் தினம்

தேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில்  தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவபிரியா தலைமையில் நேற்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

இவ் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் நிகழ்வில் பாரம்பரிய உணவு போட்டி கயிறு இழுத்தல் போட்டி மற்றும் நுண்கடனால் எற்படும் பிரச்சனை சம்பந்தமான வீதி நாடகம் போன்றனவும் இடம் பெற்றதுடன். புரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.













Share:

ஞாயிறு, 4 மார்ச், 2018

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் நடாத்திய மாபெரும் விருதளிப்பு விழா - 2018

(Ks Saran)

இந்நிகழ்வானது 03.03.2018 சனிக்கிழமை பி.ப. 2.45 மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மண்டபத்தில் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத் தலைவர் க.ஞானரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக .எம்.உதயகுமார் அரசாங்க அதிபர், மாவட்டச் செயளாளர்  கலந்து சிறப்பித்தார். ஆத்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தா ஜீ மகராஜ் பொறுப்பாளர், இராமகிருஸ்ணமடம், கல்லடி சிறப்பு அதிதிகளாக .எம்.கே. பேரின்பராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி , பதில் நீதவான்  மற்றும் ஆர்.சுகிர்தராஜன்  வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம் அத்துடன் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மேலதிக பணிப்பாளர் நாயகம், திறைசேரி, நிதி அமைச்சு என்போர் கலந்து சிறப்பித்தனர்.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate