வெள்ளி, 30 டிசம்பர், 2016
தேற்றாத்தீவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும்.இம் முறை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினல்(நேற்று வியாழக்கிழமை(29.12.2016) மாலை பரிவார ஆலயத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட ஸ்னபான அபிஷேகம்மும் விசேட பூஜை,பஜனை மற்றும் சமய செற்பொழிவுகளும் இடம் பெற்றன.
புதன், 28 டிசம்பர், 2016
NVQ முறையில் நடைபெறும். பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் 2017 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம் அற்புதபிள்ளையார் ஆலய வீதி களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 .
ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: -
பாடநெறிகள் காலம் NVQ
1. கணனி 06 மாதங்கள் மட்டம் 4
2. நீர்குழாய் பொருத்துதல் 03 மாதங்கள் மட்டம் 3
3. உருக்கி ஒட்டுதல் 06 மாதங்கள் மட்டம் 3
4. மின் இனணப்பாளர் 06 மாதங்கள் மட்டம் 3
5. அழகுக்கலை 06 மாதங்கள் மட்டம் 3
6. தையல் 06 மாதங்கள் மட்டம் 4
NVQ முறையில் நடைபெறும்.
பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்
மேலதிக தகவல்களுக்கு
நிலைய பொறுப்பாளர்
தொழிற்பயிற்ச்சி நிலையம்
அற்புதபிள்ளையார் ஆலய வீதி
களுவாஞ்சிகுடி.
0710318796 0777140869
ஞாயிறு, 25 டிசம்பர், 2016
இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்மொழி
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
வைத்தியதுறை அபிவிருத்தியில் இனம் மதம் வேறுபாடு ஆதிக்கம் செலுத்தக்கூடாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா
வைத்தியதுறையில் இனம் மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான முறையில் அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். நேற்று(22) மாகாண சபையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான சுகாதாரதுறை மீதான வரவுசெலவுத்திட்ட வாசிப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியசேவையில் இனம் மதம் பார்க்கக் கூடாது என்பதில் நாங்களும் உடன்படுகின்றோம். ஆனால் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்யும் போது பிரதேசம், இனம், மத வேறுபாடுகள் பார்க்காமல் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எதிர்க்கட்சி தலைவர். பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
வியாழன், 15 டிசம்பர், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் நேற்று(14.12.2016) புதன் கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
புதன், 14 டிசம்பர், 2016
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் சீருடை வழங்கி வைப்பு.
களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடை களுவாஞ்சிகுடி இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து அதனுடைய பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுக்கழகத்தினரால் மக்கள் அமைப்பின் பணிப்பாளருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தேற்றாத்தீவில் சிறப்பாக இடம் பெற்ற சர்வால தீபம் திருவிழா
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(13.12.2016) செவ்வாய்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
சனி, 10 டிசம்பர், 2016
செவ்வாய், 6 டிசம்பர், 2016
மட்டக்களப்புஉயர்தொழில் நுட்பகல்லூரிமாணவர்கள் தேசியமட்டஆங்கிலதினப் போட்டியில் நாடகத்துறையில் முதலாம் இடம் பெற்றுச் சாதனை
இலங்கைஉயர்தொழில்நுட்பக்கல்விநிறுவகத்தினால் (SLIATE)உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளின்ஆங்கில துறைமாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கிலதினப் போட்டியில் இவ்வருடம் 2016 நடைபெற்றமேற்படிபோட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை”(The Story Of Jewel Anklet)எனும் தலைப்பிலானநாடகத்திற்குமுதலாம் இடத்தினையும்,குழுப்பாடல் மற்றும் பண்பாட்டுரீதியானநவநாகரீகஉடைப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
வெள்ளி, 2 டிசம்பர், 2016
புதன், 30 நவம்பர், 2016
ஞாயிறு, 27 நவம்பர், 2016
கிழக்கு மாகாண தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேறுமா??
கிழக்கில் மட்டக்களப்பில் தற்போது தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் சிங்களவர்களால் கபளிகரம் செய்யப்பட்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்தான். இருந்தாலும் இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாரதூரமான பிரச்சினைகளாக சென்றுகொண்டிருக்கின்றது. மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களான கெவுளியாமடு, புளுக்குனாவை, கறுவாச்சோலை, மயிலத்தனம் மற்றும் மாதவன்ன போன்ற தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேறுகின்றனர். விவசாய நிலங்களில் சேளைப்பயிர்செய்கை மற்றும் நெற்பயிர்ச்செய்கை செய்வதாக கூறி இவ்வாறு பெரும்பாண்மை இனத்தவர்கள் குடியேறுகின்றனர்.
வியாழன், 24 நவம்பர், 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகத்திற்கு தயாராக இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நீதிமன்ற கட்டளைப்படி அழிப்பு.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட களஞ்சியம் ஒன்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகத்திற்கு தயாராக இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நீதிமன்ற கட்டளைப்படி அழிப்பு.
அரிசி - 17000 கிகி
கோவா - 20 கிகி
செ.மிளகாய் - 40 கிகி
கொத்தமல்லி - 26 கிகி
பீற்றூட் - 80 கிகி
மீன் - 200 கிகி
கத்தரிக்காய் - 20 கிகி
பருப்பு - 25 கிகி
இவைகள் கௌரவ நீதவானின் கட்டளைகளைப்படி அழிப்பு.
புதன், 23 நவம்பர், 2016
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றதுதிருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவருமான பரிசோதகர்கள் மற்றும் ஆய்வு உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இன்று காலை 10.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்இஎம் நசீர்இவிவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல் அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காசநோய் தொடர்பான மருத்துவமுகாம்
மட்டக்களப்பில் அதிகரித்துவரும் காசநோயினை கட்டுப்படுத்துவதற்காக காசநோய்க்கான சளிப்பரிசோதனை மட்டக்களப்பு மார்புநோய்ச் சிகிச்சை நிலையத்தினால் இன்று(21) பழுகாமம் மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.
இதுதெடார்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் அதிகரித்து வருகின்ற காசநோயினை கட்டுப்படுத்துவதற்கான
களுவாஞ்சிகுடியில் BIMPUTH நடாத்திய இலவச கல்விக்கருத்தரங்கு
(பழுகாமம் நிருபர்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு களுவாஞ்சிகுடி விம் புத் நிதி நிறுவனத்தினாரால்(BIMPUTH FINANCE PLC) இம்முறை க.பொ.த. சா.தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை இலவச கல்விக்கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் அதிகளவான் மாணவர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிறுவனத்தினர் மேலும் பல சமூக சேவைகளை செய்வதற்கான திட்டமிடல்களை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கலை,கலாசாரகலை மன்றம் ஸ்தாபிக்ப்பட்டது ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில்
பிரதேசமட்டத்தில் பிரத்தியேககலை,கலாசாரநிகழ்ச்சிதொடர்பானகலைமன்றத்தினை ஸ்தாபிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று(22.11.2016) பிரதேசசெயலகமண்டபத்தில்,மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசெயலகசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.இதன் அதிபராக நா.நாகேந்திரனும்செ யலாளராக வீ.ஆர்.மகேந்திரனும் உப தலைவராக ச.செல்வப்பிரகாசும், உப செயலாளராக த.தர்மிகாவும் பொருளாளராக பா.மோகனதாஸ் போன்றோர், பிரதேசமட்டகலை,கலாசாரமன்றத்தின் பிரதான நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டனர்.
நடனக் கலைக்கூடம், கர்நாடக சங்கீத கலைக்கூடம் ,கூத்துக் கலைக்கூடம், கட்புலக் கலைக்கூடம்,மேலைத்தேய இசைக் கலைக்கூடம், இலக்கியம் மற்றும் நூல் வெளியீட்டுக் கலைக்கூடம், கிராமிய நாடகக்கலைக்கூடம், நவீன நாட்டிய ஆராய்ச்சிக் கலைக்கூடம், பிரத்தியேக கலைகலாசார நிகழ்ச்சி தொடர்பான கலைக்கூடம், தற்காப்புக் கலைக்கூடம், போன்ற வற்றுக்குமான பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் டிமாலினி நிராஜ்குருஸ் ஆகியோரும் இவ் கலந்துரையாடல் கூட்டித்தில் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் ஆற்றுகைக் கலைஞர்கள் , எழுத்தாளர்கள்,குறுந்திரைப்படக் கலைஞர்கள்,புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.
கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கு ஜனாதிபதி பாராட்டு
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறை காணப்படுவதினால் அவற்றை நிவர்த்திக்க விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் நேற்று நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது இதன் போது 9 மாகாணங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றதுடன் அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்ற முதல் கூட்டமாக இது அமைந்திருந்தது
செவ்வாய், 22 நவம்பர், 2016
பிள்ளைகளுக்கான கேள் திறன் தொடர்பான பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்
(லியோன்)
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கான கேள் திறன் தொடர்பான பரிசோதனைகள் இன்று
முதல் போதனா வைத்தியசாலையில் ஆரம்பம்















































