வெள்ளி, 30 டிசம்பர், 2016
தேற்றாத்தீவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும்.இம் முறை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினல்(நேற்று வியாழக்கிழமை(29.12.2016) மாலை பரிவார ஆலயத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட ஸ்னபான அபிஷேகம்மும் விசேட பூஜை,பஜனை மற்றும் சமய செற்பொழிவுகளும் இடம் பெற்றன.
புதன், 28 டிசம்பர், 2016
NVQ முறையில் நடைபெறும். பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் 2017 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம் அற்புதபிள்ளையார் ஆலய வீதி களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 .
ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: -
பாடநெறிகள் காலம் NVQ
1. கணனி 06 மாதங்கள் மட்டம் 4
2. நீர்குழாய் பொருத்துதல் 03 மாதங்கள் மட்டம் 3
3. உருக்கி ஒட்டுதல் 06 மாதங்கள் மட்டம் 3
4. மின் இனணப்பாளர் 06 மாதங்கள் மட்டம் 3
5. அழகுக்கலை 06 மாதங்கள் மட்டம் 3
6. தையல் 06 மாதங்கள் மட்டம் 4
NVQ முறையில் நடைபெறும்.
பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்
மேலதிக தகவல்களுக்கு
நிலைய பொறுப்பாளர்
தொழிற்பயிற்ச்சி நிலையம்
அற்புதபிள்ளையார் ஆலய வீதி
களுவாஞ்சிகுடி.
0710318796 0777140869
ஞாயிறு, 25 டிசம்பர், 2016
இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்மொழி
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
வைத்தியதுறை அபிவிருத்தியில் இனம் மதம் வேறுபாடு ஆதிக்கம் செலுத்தக்கூடாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா
வைத்தியதுறையில் இனம் மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான முறையில் அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். நேற்று(22) மாகாண சபையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான சுகாதாரதுறை மீதான வரவுசெலவுத்திட்ட வாசிப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியசேவையில் இனம் மதம் பார்க்கக் கூடாது என்பதில் நாங்களும் உடன்படுகின்றோம். ஆனால் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்யும் போது பிரதேசம், இனம், மத வேறுபாடுகள் பார்க்காமல் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எதிர்க்கட்சி தலைவர். பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
வியாழன், 15 டிசம்பர், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் நேற்று(14.12.2016) புதன் கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
புதன், 14 டிசம்பர், 2016
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் சீருடை வழங்கி வைப்பு.
களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடை களுவாஞ்சிகுடி இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து அதனுடைய பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுக்கழகத்தினரால் மக்கள் அமைப்பின் பணிப்பாளருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தேற்றாத்தீவில் சிறப்பாக இடம் பெற்ற சர்வால தீபம் திருவிழா
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(13.12.2016) செவ்வாய்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
சனி, 10 டிசம்பர், 2016
செவ்வாய், 6 டிசம்பர், 2016
மட்டக்களப்புஉயர்தொழில் நுட்பகல்லூரிமாணவர்கள் தேசியமட்டஆங்கிலதினப் போட்டியில் நாடகத்துறையில் முதலாம் இடம் பெற்றுச் சாதனை
இலங்கைஉயர்தொழில்நுட்பக்கல்விநிறுவகத்தினால் (SLIATE)உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளின்ஆங்கில துறைமாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கிலதினப் போட்டியில் இவ்வருடம் 2016 நடைபெற்றமேற்படிபோட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை”(The Story Of Jewel Anklet)எனும் தலைப்பிலானநாடகத்திற்குமுதலாம் இடத்தினையும்,குழுப்பாடல் மற்றும் பண்பாட்டுரீதியானநவநாகரீகஉடைப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.




















