வெள்ளி, 30 ஜூன், 2017
இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கி வைப்பு
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் 40ம் கிராம சக்தி கலா மன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை (26) இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று கோட்ட கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் .கணேசமூர்த்தி சமூர்தி அபிவிருத்தி உத்தியோதகஸ்தர் ஆலய பிரதம குரு ஆலய நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் சக்தி கலா மன்ற தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வியாழன், 29 ஜூன், 2017
பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்
மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி 95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94வது கூட்டுறவு தினப் பேச்சுப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று கொழும்பு நெலும்பொக்குண அரங்கில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 28 ஜூன், 2017
சத்துணவுத் திட்ட மீளாய்வு-சுரவணையடியூற்று பாலா் பாடசாலை.
கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
ஞாயிறு, 25 ஜூன், 2017
கிழக்கின் இளைஞர் முன்னணியின் தொடரும் கல்விச் சேவை.
கிழக்கின் இளைஞர் முன்னணியமைப்பானது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தனது கல்விச்சேவையை வழங்கிவருகின்றது. அதனடிப்படையில் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் தலைமையில் கடந்த பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான இலவசக்கல்விக் கருத்தரங்கு தொடரின் 2ம் தொடர் நேற்றைய தினம்(24.06.2017) கோவில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகியது. படுவான்கரை பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளினை ஒன்றிணைத்து இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டிருந்தது.
வியாழன், 22 ஜூன், 2017
ஞாயிறு, 11 ஜூன், 2017
செட்டிச்சி கண்ணகைக்கு தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கல்யாணசடங்கு
மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த கல்யாண திருச்சடங்கின் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.06.2017) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. ஆலயத்தில் தேற்றாத்தீவு சிறுவர்களிளால் வசந்தன் கூத்து அளிக்கை செய்யப்பட்டது மதியம் 12 மணிக்கு மாபெரும்அன்னதாமும் அதனை தொடந்து மாலை 04.30 மணியளில் கண்ணகை அம்மனின் கல்யாண திருச்சடங்கு இடம் பெற்றது.
வியாழன், 8 ஜூன், 2017
புதன், 7 ஜூன், 2017
மருவிப்போன மட்டக்களப்பு கதையாடல்கள்
Thirugnanasampanthan Lalithakopan
1. தத்தி – குழு / ஆட்கள்
தத்தி தத்தியாய் பிள்ளைகள் வருகிறார்கள் .....
அவனிலை கை வையாத .... தத்தி கூடின ஆள் அவன் ....
இதை விட மட்டக்களப்பின் விவசாயிகள் தங்கள் மாடுகளை குழுவாக மேய்க்கும்போது அதனை தத்தி மாடு மேய்த்தல் என்றே கூறுவர்.பத்து விவசாயிகள் சேர்ந்து ஒரு தத்தி அமைத்தால் ஒருநாளைக்கு குழுவின் ஒருவர் தத்தி மாடுகளுக்கு மேய்ச்சல் பொறுப்பாளியாவார்.
2. வகுத்துவார் – பகுதியார்/ குடும்பத்தார்
மட்டக்களப்பின் கோவில் உற்சவங்கள் மற்றும் பூசைகள் குடி அடிப்படையிலேயே இடம்பெறும்.ஒரு குடி பல வகுத்துவார்களை அல்லது பெரிய குடும்பத்தினரை கொண்டது.வைரரின் வகுத்துவார்/ வெள்ளையரின் வகுத்துவார் என கதையாடல்கள் காணப்படும்.
ஒரு கோவிலில் ஒரு குடிக்கு நிறைய பூசைகள் இருந்தால் அதை அவர்கள் இன்ன வகுத்துவாருக்கு இன்ன பூசை என பகுத்து பிரிப்பர்.
3. கென்னை – மூலை முடுக்கு
இது கொல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும்.
"நீ எந்த கென்னையில இருந்தாலும் உன்ன விடமாட்டன்"
4. நாசமறுப்பு – கரைச்சல் / தொல்லை
'விடிய வெள்ளன என்ன நாசமறுப்பு இது'
5. கச்சால் – பிரச்சினை
'உன்ர மச்சான் என்ன கச்சால் போடுறான்'
6. உத்தியோகாராக்கள் – முன்னோர் / பிதிரர்கள்
புரட்டாதி மாதத்தில் அமரர் நினைவாய் இடம்பெறும் மஹாளய வழிபாடுகளை மட்டக்களப்பு பகுதியில் உத்தியோகாராக்களுக்கு செய்வது என்றே பொதுப்படையாக குறிப்பிடுவர்.உண்மையிலேயே இந்த சொல் வேடுவர்களால் தங்கள் முன்னோர்களை குறிப்பிட பயன்படுத்திய 'உத்தியாக்கள்" என்ற சொல்லில் இருந்தே மருவியிருப்பதாய் கூறுவர்.
7. பூணாரம் – ஆபரணம்
'புரிசன் செத்து ஆண்டு கழியல்ல என்ன பூணாரம் வேண்டி கிடக்கு இவக்கு"
8. காலை – பயிர்தோட்டங்களை இந்த பெயரினால் அழைத்தல் இங்கு மரபு.
'இந்த போகம் காலைக்குள்ள என்ன நாட்டினாய்"
இதை விட மாடு கலைக்கும்போது "காலை காலை' என்று விளித்து கலைப்பர்.
9. வாரி – விளைச்சல்
'அண்ணனுக்கு இந்த முறை நல்ல வாரி போல கிடக்கு"
10. சூறு- திமிர்
'முளைச்சு நாலு இல விடல்ல அவனின்ர சூறை பார்"
11. சுள்ளாப்பு- சுட்டிதானம்
'அந்த வெள்ள கண்டு(கன்றுக்குட்டி) நல்ல சுள்ளாப்பாய் இருக்கு.
12. தனகுதல் – வம்பை விலைக்கு வாங்குதல்
'வேலையால களைச்சு போய் வாற மனிசனோட நீ தனகாத"
13. உரஞ்சுவாரம்
14. தனகுவாரம்
இந்த இரண்டு சொற்களும் கூட வலிந்து சண்டைக்கு போதல் அல்லது வம்பை விலைக்கு வாங்குதலையே குறிக்கும்.
"சும்மா போற பெடியனோட உனக்கு என்ன தனகுவாரம் வேண்டி கிடக்கு'
14. தனகுவாரம்
இந்த இரண்டு சொற்களும் கூட வலிந்து சண்டைக்கு போதல் அல்லது வம்பை விலைக்கு வாங்குதலையே குறிக்கும்.
"சும்மா போற பெடியனோட உனக்கு என்ன தனகுவாரம் வேண்டி கிடக்கு'
15.இருட்டோட – இருட்டு ஓட அதாவது காலையில்
'விடியட்டும் ... இருட்டோடையிலேயே சந்தைக்கு போகணும்'
'விடியட்டும் ... இருட்டோடையிலேயே சந்தைக்கு போகணும்'
16.ஆண்டுல மூண்டில – எப்போதாவது
"ஆண்டுல மூன்டிலயாவது ஊருக்கு வாவனடா மனே'
"ஆண்டுல மூன்டிலயாவது ஊருக்கு வாவனடா மனே'
17.மனே- மகனே அல்லது மகளே என்பதன் சுருங்கிய வடிவம்.இந்த பகுதியில் இது பொதுவான விளிப்பு குறியீடு.
'என்ன மனே இந்த பக்கம்'
'என்ன மனே இந்த பக்கம்'
18.கிட்டடியில – அண்மையில்
'கொக்குநாரைக்கு கிட்டடியிலதான் நம்மட வட்டையும் கிடக்கு'
'கொக்குநாரைக்கு கிட்டடியிலதான் நம்மட வட்டையும் கிடக்கு'
19.வப்பாசியில் ஏத்துதல்- பப்பாசியில் ஏத்துதல் என்பதன் மருவிய வடிவம்.இதன் பொருள் நன்கு கதைத்து ஏமாற்றுதல் என்பதாகும்.
'இவனுகள நம்பாத புள்ள.கொஞ்சம் அசந்தாலும் உன்ன வப்பாசியில ஏத்தி போடுவானுகள்"
'இவனுகள நம்பாத புள்ள.கொஞ்சம் அசந்தாலும் உன்ன வப்பாசியில ஏத்தி போடுவானுகள்"
20.உறண்டல்- மெலிந்த
உரைநடை வழக்கில் தொத்தலும் வத்தலும் என்ற பதத்துக்கு இணையானது.
'பெட்ட வடிவுதான் .ஆனால் ஆள் கொஞ்சம் உறண்டல்.இனி உன்ர முடிவுதான்"
உரைநடை வழக்கில் தொத்தலும் வத்தலும் என்ற பதத்துக்கு இணையானது.
'பெட்ட வடிவுதான் .ஆனால் ஆள் கொஞ்சம் உறண்டல்.இனி உன்ர முடிவுதான்"
21.அவிஞ்சு போதல்- பணிந்து போதல்
'உன்ர புரிசன்ர கதைக்கு எல்லாம் அவிஞ்சு போக ஏலாது கண்டியோ'
'உன்ர புரிசன்ர கதைக்கு எல்லாம் அவிஞ்சு போக ஏலாது கண்டியோ'
22.கண்டியோ – மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் அதிகமதிகம் புழக்கத்தில் உள்ள சொற்றொடர் இது.இதன் பொருள் 'சரியோ' என்பதாய் அமையும்.
23.வெறுவாக்கிலம் கெட்டதுகள் – யாரையும் திட்டுகையில் இந்த சொற்றொடர் பாவிக்கப்படுவதுண்டு.இதன் அர்த்தம் ஒன்றுமற்றதுகள் அல்லது நாதியற்றவர்கள் என்பதாகும்.
24.காட்டுக்கு போதல் – மலசல கூடங்கள் பாவனைக்கு வரும் முன்னர் கிராமங்களை அண்டிய காடுகளிலேயே மக்கள் தங்கள் காலை கடன்களை நிறைவேற்றினர்.ஆகவே இதற்கான குறியீட்டு பெயராக காட்டுக்கு போதல் நிலை பெற்றிருந்தது.
25.சோட்டை – ஆசை
'மச்சான காணவும் சோட்டையாய் கிடக்கு'
'மச்சான காணவும் சோட்டையாய் கிடக்கு'
நட்புக்களே இந்த சொல்லாடல்களில் அதிகமானவற்றை அம்மம்மாவுடன் நான் வாழ்ந்த காலங்களிலேயே அதிகம் பழகி கொண்டேன்.இன்று அம்மம்மாவும் இல்லை.இந்த சொற்களும் புழக்கத்தில் இல்லை.அம்மம்மாவுடன் இருந்த காலங்கள் மறக்க முடியாதவை......
நினைவுகள் மீள்கையில் இன்னும் வரும்.
தேற்றாத்தீவில் சதங்கை அணி விழா
மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இன்று (07.06.2017) புதன் கிழமை வசந்தன் கூத்தின் சதங்கை அணிவிழா இன்று இடம் பெற்றது.வசந்தன் கூத்தில் பங்கு பற்றும் சிறுவர்களுக்கு கூத்தின் அண்ணாவியாரால் முதலில் சதங்கை அணியப்பட்டதை தொடர்ந்நு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் வசந்தன் ஆடப்பட்டத்தை தொடர்ந்து.கூத்து இடம் பெறும் களரியில் எனைய வசந்தன் கூத்துக்கள் ஆடப்பட்டன.
ஞாயிறு, 4 ஜூன், 2017
கல்குடா கல்வி வலயப் பணிப்பாளரை வரவேற்ற திகிலிவெட்டை கிராம மக்களின் நன்றி மறவாத நிகழ்வு
அண்மையில் கல்குடா கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வலயப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்ற தினகரன் ரவிக்கு திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமோக வரவேற்பு இன்று (3) சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.தவனேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்றது.கல்குடா கல்வி வலயத்திற்கான வலயப் பணிப்பாளர் பதவிக்கான நியமனம் பெற்ற பின்னர் முதன் முதலாக வலய பணிப்பாளரின் சொந்த கிராமமான திகிலிவெட்டையில் அமைந்துள்ள தனது பாடசாலையில் இன்றைய பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வியாழன், 1 ஜூன், 2017
கல்வியில் வறுமை மட்டக்களப்பு மக்களுக்கு சாபக்கேடா!
(சி.தணிகசீலன்)
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மட்டக்களப்பு ஒரு புராதன, பாரம்பரியம் வாய்ந்த தமிழ் மக்களை அதிகம் கொண்ட வரலாற்று முக்கியம் பெற்ற வளமார்ந்த இடமாகும். 'ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' என்றாள் ஒளவை இந்த அழகுக்கு அழகு சேர்கும் வாவிகள் நிறைந்த, கடற்கரைகள், வயற்புலங்கள், காடுகள் மலைகள் என அனைத்து நிலவமைப்பையும் கொண்ட வளம் நிறை நாடு எமது மீன்பாடும் தேநாடு ஆகும் பெருமைதான்.























