களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணான கு.பூபதி (வயது 70) கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பலன்னின்றி பலியானார்.
வெள்ளி, 29 டிசம்பர், 2017
திங்கள், 25 டிசம்பர், 2017
கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் ஆலயத்தினால் நாட்காட்டிவெளியீடும் - தேற்றாத்தீவில்
(நிரேஸ்)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தினால் நேற்று (24.12.2017) ஞாயிற்றுக்கிழமை கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் ஆலயத்தின் நாட்காட்டிவெளியீடும் நிகழ்வு ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது இன் நிகழ்விற்கு பிரதம அதிதியா பட்டிருப்பு பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.ஞானராஜா விசேட அதிதியாக நன்கொடையாளர்ளும் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 24 டிசம்பர், 2017
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கஜமுக சூர சங்காரம்
விநாயகர் சஷ்டி விரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(24.12.2017) தேற்றாத்தீவுகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சங்காரபோர் வெகுசிறப்பாக இடம் பெற்றது.இதனைஆலயபிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நிகழ்த்திவைத்தார்.
அந்தவகையில் கஜமுக சூரனைவதைக்கும் பொருட்டு ஆலயத்தில் இருந்து எழுந்தருளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு போர் ஆரம்பமானது.இதன் பொது பல ஆயுதங்களுடன் கஜமுகன் போர் ஈட்டதுடன் இறுதியில் விநாயகர் தனது கொம்புடைத்து கஜமுகனை நோக்கி எறிந்தது கஜமுகன் வதைக்க மூர்சிக வாகனமாக உருவெடுத்தவுடன் அதை தன் வாகனமான தனதாக்கிகொண்டார்.இதனை தொடர்ந்து விநாகப்பெருமானுக்கு பிரய்ச்சித்த அபிஷேகம் இடம் பெற்றது.
இவ் கஜமுக சூர சங்காரம் நிகழ்வினை கண்டு தர்சிக்க பல்லாயிக்கணக்காண அடியார்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சஷ்டி விரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(24.12.2017) தேற்றாத்தீவுகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சங்காரபோர் வெகுசிறப்பாக இடம் பெற்றது.இதனைஆலயபிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நிகழ்த்திவைத்தார்.
அந்தவகையில் கஜமுக சூரனைவதைக்கும் பொருட்டு ஆலயத்தில் இருந்து எழுந்தருளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு போர் ஆரம்பமானது.இதன் பொது பல ஆயுதங்களுடன் கஜமுகன் போர் ஈட்டதுடன் இறுதியில் விநாயகர் தனது கொம்புடைத்து கஜமுகனை நோக்கி எறிந்தது கஜமுகன் வதைக்க மூர்சிக வாகனமாக உருவெடுத்தவுடன் அதை தன் வாகனமான தனதாக்கிகொண்டார்.இதனை தொடர்ந்து விநாகப்பெருமானுக்கு பிரய்ச்சித்த அபிஷேகம் இடம் பெற்றது.
இவ் கஜமுக சூர சங்காரம் நிகழ்வினை கண்டு தர்சிக்க பல்லாயிக்கணக்காண அடியார்கள் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
வியாழன், 14 டிசம்பர், 2017
அனோரியா ஆங்கில அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு நவாவற்குடா அமைந்துள்ள அனோரியா ஆங்கில அக்கடமி கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14.12.2016) வியாழக்கிழமை மாலை கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது .
இந் நிகழ்வானது இக் கல்வி நிலையத்தின் நிர்வாகியும் , ஆசிரியருமான கு . குமரேசன் தலைமையில் இடம்பெற்றது.இன்நிகழ்விற்கு பிரமத விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கலந்து கொண்டதுடன் மேலும் பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு,கவிதை,உரையாடல் மற்றும் எழுத்து பயிற்சிகள் போன்ற திறமைகளுக்கு மாணவர்களை கௌரவிப்பும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
செவ்வாய், 12 டிசம்பர், 2017
புதன், 6 டிசம்பர், 2017
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண வானிலையின் நாளைய போக்கு.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்க மையம் சூறாவளியாக விருத்தியடைந்து இலங்கைக்குக் கிழக்கே சுமார் 800 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது.
இந்தச் சூறாவளி இலங்கையை தாக்குவதற்கான வாய்ப்புகள் எதிர்வு கூறப்படுகின்ற போதும், அதனுடைய விருத்தி மற்றும் நகர்வுப் பாங்கினை வைத்து நோக்குகின்ற பொழுது தற்பொழுது நிலைகொண்டிருக்கின்ற மையத்தில் இருந்து வடமேற்காக நகர்ந்து இந்தியாவின் விசாகா பட்டினத்தை சென்றடைவதற்கான வாய்பே காணப்படுகின்றது. இன்று நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அதன் போக்கை செய்மதித் தரவுகளின் அடிப்படையில் "In Meteo" இனால் எதிர்வுகூறப்பட்ட படங்களின் மூலம் அவதானிக்கலாம். அவ்வாறு நகர்ந்து செல்லுகின்ற பொழுது இலங்கையில் குறிப்பாக தெற்கு, கிழக்கு வடக்கு பிராந்தியங்களில் சாதாரண காற்றுடன் கூடிய மழை பொழிவுக்கான வாய்புகள் ஆங்காங்கே காணப்படும். ஆகவே பொது மக்கள் சூறாவளித் தாக்கம் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. மனதைத்திடப்படுத்திக்கொள்வதோடு, மழை, காற்று, குளிர் போன்ற ஆசாதாரண வானிலை நிலவுகின்ற இவ்வேளைகளில் தமது அன்றாட வாழ்வுக்கு தேவையான உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை பேணி வைத்துக்கொள்ளவது அவசியமானதாகும். வானிலை என்பது குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் நிலவும் வளிமண்டலத்தின் பிரதிபலிப்பு ஆகும். ஆதற்கமைய தொடர்ச்சியான அவதானித்து சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் மக்களை பீதியற்ற வகையில் வழிப்படுத்த முடியும்.
தகவல்: கிருபா இராஜரெட்ணம்.
சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
2). InMeteo, Czechia from https://www.ventusky.com/
3). INSAT3D IMAGER satellite data, Indian Meteorological Department. From http://www.rapid.imd.gov.in/
திங்கள், 4 டிசம்பர், 2017
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம்
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் இன்று (04.12.2017) திங்கள் கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
இதன் போது விநாயகப்பெருமானுக்கு விசேட அபிஷேகமும் அதனை தொடர்ந்து விரம் நேர்க்கும் அடியர்களுக்கு சங்கர்பம் பண்ணும் கிரியை தொடர்ந்து காப்பு கட்டுமை கிரியை இடம் பெற்று முடிந்ததை தொடர்ந்து. எடுபடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.பி.ப.01.30 மணியளவில் விசேடவிரத பூஜை இடம் பெற்று முடிந்தது.இம் முறை விநாயகர் சஷ்டி விரம்மானது 04.12.2017 ஆரம்பமாகி எதிர்வரும் வருடம் 24.12.2017 கஜமுகன் சங்கரம்மும் பெருங்கதை இடம் பெறும் 25.12.2017 அன்று பாலபூஸ்கருணி பொய்கையில் தீர்த்த உர்ச்சவமும் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்கது
ஞாயிறு, 3 டிசம்பர், 2017
வெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடைக்க முயற்சிக்க வேண்டாம். இரா.சாணக்கியன் தெரிவிப்பு
வெள்ளி, 1 டிசம்பர், 2017
மட்டு பழைய மாணவர்களால் Car Wash
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வருகின்ற 02.12.2017 சனிக்கிழைமை காலை 08.00மணி முதல் இந்த Car Wash மட்டக்களப்பு GV வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெறும்.
செவ்வாய், 28 நவம்பர், 2017
தொடர்மழையால் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச சபை உடனடி நடவடிக்கை.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பபட்ட பல கிராமங்களின் உள்வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடுவதற்கு வடிகான்கள் இன்மையால் அனைத்து மழைநீரும் வீதிகளில் தேங்கி நின்றமையால் மக்கள் போக்குவரத்திற்கு
திங்கள், 27 நவம்பர், 2017
எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறுவெட்டு வெளியீடு.
தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும், வெள்ளிச்சரம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சி.தணிகசீலன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தலைவர்சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் இடம்பெற உள்ளது.
இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தனிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற இருக்கின்ற நிகழ்வில் பேராசிரியர் மா.செல்வராசா முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலக்கியவாதி உடுவை ளு. தில்லைநடராசா ஆகியோர் முன்னிலை வகிக்க கலாநிதி க.பிரேமகுமார், சிரேஸ்ட்ட விரிவுரையாளா , முன்னால் உபவேந்தர்;, கிழக்குப் பல்கலைக்கழகம், கலாநிதி க.இராஜேந்திரன், சிரேஸ்ட்ட விரிவுரையாளர், முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம், வைத்திய நிபுணர் க.அருளானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,எந்திரி.ந.சிவலிங்கம், மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம,; மட்டக்களப்பு,வைத்தியர் கு.சுகுணன்;, வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை;,கலாநிதி சு.சிவரெட்டினம்;, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,, .சுரேஸ் ஜெயப்பிரபா, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், சோ.ஜெகநாதன், துறைத்தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம்,மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால்,சைவப் புரவலர்.வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோருடன் புத்திஜீவிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்த கவிதை வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரையினை சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், பீடதிபதி, காயத்திரிபீடம் மட்டக்களப்பு வழங்க இருக்கின்றார்.
இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் முகமாக கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பின் முதுபெரும் கலைஞர்களாக விளங்கும் மாஸ்ட்டர் சிவலிங்கம், கவிஞ்ஞர் வாகரைவாணன், கலாபூசணம் கவிஞ்ஞர் தேனூரான் ஆகியோர் கௌரவித்து பாராட்டப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வினை ச.இன்பராசன், உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொகுத்து வழங்க, இந்த நிகழ்வில் அறிமுக உரையை க.மோகனதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்கள் தொடர ஆய்வுரையினை கலாநிதி எஸ்.அமலநாதன், மேலதிகச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு அன்புக்குரிய ஊடகவியலாளர்கள்,ஆர்வமுள்ளவர்கள், கலைஞர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த முயற்சிக்கு ஊக்கம்தந்து உதவுமாறு அனைவருக்கும் ஆசிரியர் தயவான அழைப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
சனி, 25 நவம்பர், 2017
தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை விளையாட்டு விழா
இவ் விளையாட்டு விழாவின் பொது பாலர் பாடசாலை மாணவமாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சி,தாரா நடை, பூக்கோர்தல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கலந்து சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
புதன், 22 நவம்பர், 2017
"முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்"

திங்கள், 20 நவம்பர், 2017
இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி. பழுகாமம் இளைஞர்கள் தெரிவிப்பு
பல வருடங்களின் பின்னரும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்களின் பின்னர் உள்ராட்சி தேர்தல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்புமுறைத்தேர்தலாக நடாத்தப்படவுள்ளது.