வியாழன், 15 பிப்ரவரி, 2018

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்

தமது இரு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அதுசார்ந்து தமக்கான சாதகமான நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அடுத்த நகர்வாக கிழக்கில் இடம்பெற இருக்கும் 387 பட்டதாரிகளிற்கான நியமனமன்றி கிழக்கிலுள்ள ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களையும், மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களையும் விரைவுபடுத்தக்கோரிய கோரிக்கை கடிதத்தினை சிறிலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் ஊடாக ஜனாதிபதியிடம் கொழும்பில் கையளித்திருந்தோம்.
Share:

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வெற்றி விநாயகரின் V.P.L

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகதத்தின் ஏற்பாட்டில் இன்று (11.02.2016) ஞாயிற்றுக்கிழமை அணிக்கு 11 பேர் கொண்ட V.P.L கிரிகட் போட்டி ஆரம்பம்மானது.இவ் கிரிக்கட் போட்டியில் எட்டு அணிகள் விளையாடுகின்றது.
Share:

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி அன்று அடியார்கள் உயிர்லிங்கத்திற்கு அபிஷேகம் வாய்ப்பு



மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 2018.02.13(செவ்ழவாய்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளன.

அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பாலறு பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம் பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரை பஜனை, சங்கீதக்கச்சரி, நடனம், கதாப்பிரசங்கம், நாட்டுக்கூத்து, சமய பேருரைகள் என்பன இடம் பெறும். என ஆலய பரிபான சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்





Share:

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

முனைக்காட்டு இளைஞர்களால் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு.


முனைக்காடு மாதிரி பண்ணைக்கு பின்னாலுள்ள ஆற்றங்கரையோர சதுப்பு நில பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினை  இன்று (06.02.2018)  முனைக்காட்டு இளைஞர்கள் சுற்றி வளைப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
Share:

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல்

                                                      (அப்துல்சலாம் யாசீம்,ஜெயஹரி)
சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (02) மட்ட்டக்களப்பில் நடை பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு,பாசிக்குடா,
கல்குடாவைச்சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது வன விலங்குகள் குறிப்பாக முதலைகளால் உள்ளாசப்பிரயாணிகளுக்கு ஏற்பபட்டுள்ள அச்சுறுத்தல்,ஹோட்டல் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்குதல்,கிழக்கு மாகாண உல்லாச பிரயாணம் தொடர்பான உட்கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில் உயர் தரமான உல்லாசப்பிரயாணத்துறை கட்டுமானங்களை உருவாக்குதல் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பிரதான தொழிற்துறையாக உல்லாச பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன,கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் சாலித்த விஐயசுந்தர என பலரும் கலந்து கொண்டனர்.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate