செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

முனைக்காட்டு இளைஞர்களால் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு.


முனைக்காடு மாதிரி பண்ணைக்கு பின்னாலுள்ள ஆற்றங்கரையோர சதுப்பு நில பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினை  இன்று (06.02.2018)  முனைக்காட்டு இளைஞர்கள் சுற்றி வளைப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.


இவர்களது சுற்றிவளைப்பின்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் பெருந்தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் பட்டிப்பளை பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இங்கு இடம்பெறும் கசிப்பு உற்பத்திகாரர்கள் பொலிஸ்ரிற்கு பணம் வழங்குவதாகவும், பொலிஸாரின் மறைமுக அனுமதியுடன் இச் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate