மட்டக்களப்பு,தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்தபிரமோற்சவத்தினைமுன்னிட்டுசிவகுருதணிகசீலன் அவர்களினால் கொம்புச்சந்திவிநாயகர் புகழ்பாடும்'கொம்புச்சந்திநாதம்' இறுவட்டானது, 2018.04.23திங்கட்கிழமைஅன்றுஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசாதலைமையில் ஆலய பரிபாலனசபையினரால் கொம்புச்சந்திப் பேராலயமகாமண்டபத்தில் வைத்துவெளியிட்டுவைக்கப்பட்டது.
புதன், 25 ஏப்ரல், 2018
திங்கள், 23 ஏப்ரல், 2018
மாங்காடு சமுர்த்தி வங்கியால் நடாத்தப்பட்ட விளம்பி புது வருட விளையாட்டு நிகழ்வு!
மாங்காடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டுவிழா - 2018 நிகழ்வு நேற்று 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது
சனி, 21 ஏப்ரல், 2018
புதன், 18 ஏப்ரல், 2018
மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழா – 2018
மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 20.04.2018 திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29.04.2108 ஞாயிற்றுக்கிழமை தீர்தோற்சவத்துடன் முடிவடையவுள்ளது அந்த வகையில் எதிர் வரும் 19.04.2018 வியாழக்கிழமை விநாயகர் வழிபாட,புண்ணியயாக வாசனம்,கிராமசாந்தி,பிரவேசபலி வாஸ்த்து சாந்தி, மிருக சங்கிரணம், அங்குரார்ப்பணம் முதலியன இடம் பெறவுள்ளன.
திங்கள், 16 ஏப்ரல், 2018
வெற்றி விநாயகர் விளையாட்டுகழகழத்தின் விளம்பி புதுவருட விளையாட்டு விழா
வெற்றி விநாயகர் விளையாட்டுகழக புதுவருட விளையாட்டு விழாவான நேற்று(15.04.2018) ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகழகத்தின் தலைவர் ப.சந்திரு தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ம.உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதியமைச்சு திறைசேரி கலாநிதி மூ.கோபாலரெத்தினம் மற்றும் சிரஷ்ர சட்டதரணி,பதில் நீதவான் த.சிவநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018
புதன், 11 ஏப்ரல், 2018
சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்
தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி இன்று(11.04.2014) புதன்கிழமை ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதன், 4 ஏப்ரல், 2018
வெள்ளி, 30 மார்ச், 2018
இன்று பெரிய வெள்ளிக்கிழமை! மட்டக்களப்பு தேற்றாத்தீவு தேவாலய சிலுவைப் பாதை
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (30.03.2018) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு தேவாலயத்தை வந்தடைந்தது.
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள் மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.
வெள்ளி, 9 மார்ச், 2018
ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் தேற்றாத்தீவில் இடம் பெற்ற மகளிர் தினம்
தேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவபிரியா தலைமையில் நேற்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.
இவ் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் நிகழ்வில் பாரம்பரிய உணவு போட்டி கயிறு இழுத்தல் போட்டி மற்றும் நுண்கடனால் எற்படும் பிரச்சனை சம்பந்தமான வீதி நாடகம் போன்றனவும் இடம் பெற்றதுடன். புரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஞாயிறு, 4 மார்ச், 2018
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் நடாத்திய மாபெரும் விருதளிப்பு விழா - 2018
(Ks Saran)
![]() |
இந்நிகழ்வானது 03.03.2018 சனிக்கிழமை பி.ப. 2.45 மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மண்டபத்தில் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையத் தலைவர் க.ஞானரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக .எம்.உதயகுமார் அரசாங்க அதிபர், மாவட்டச் செயளாளர் கலந்து சிறப்பித்தார். ஆத்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தா ஜீ மகராஜ் பொறுப்பாளர், இராமகிருஸ்ணமடம், கல்லடி சிறப்பு அதிதிகளாக .எம்.கே. பேரின்பராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி , பதில் நீதவான் மற்றும் ஆர்.சுகிர்தராஜன் வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம் அத்துடன் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மேலதிக பணிப்பாளர் நாயகம், திறைசேரி, நிதி அமைச்சு என்போர் கலந்து சிறப்பித்தனர்.
வியாழன், 15 பிப்ரவரி, 2018
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்
தமது இரு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அதுசார்ந்து தமக்கான சாதகமான நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அடுத்த நகர்வாக கிழக்கில் இடம்பெற இருக்கும் 387 பட்டதாரிகளிற்கான நியமனமன்றி கிழக்கிலுள்ள ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களையும், மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களையும் விரைவுபடுத்தக்கோரிய கோரிக்கை கடிதத்தினை சிறிலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் ஊடாக ஜனாதிபதியிடம் கொழும்பில் கையளித்திருந்தோம்.
ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018
வெள்ளி, 9 பிப்ரவரி, 2018
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி அன்று அடியார்கள் உயிர்லிங்கத்திற்கு அபிஷேகம் வாய்ப்பு
மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 2018.02.13(செவ்ழவாய்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளன.
அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பாலறு பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம் பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரை பஜனை, சங்கீதக்கச்சரி, நடனம், கதாப்பிரசங்கம், நாட்டுக்கூத்து, சமய பேருரைகள் என்பன இடம் பெறும். என ஆலய பரிபான சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்
செவ்வாய், 6 பிப்ரவரி, 2018
வெள்ளி, 2 பிப்ரவரி, 2018
சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல்
(அப்துல்சலாம் யாசீம்,ஜெயஹரி)
சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (02) மட்ட்டக்களப்பில் நடை பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு,பாசிக்குடா,
கல்குடாவைச்சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது வன விலங்குகள் குறிப்பாக முதலைகளால் உள்ளாசப்பிரயாணிகளுக்கு ஏற்பபட்டுள்ள அச்சுறுத்தல்,ஹோட்டல் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்குதல்,கிழக்கு மாகாண உல்லாச பிரயாணம் தொடர்பான உட்கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில் உயர் தரமான உல்லாசப்பிரயாணத்துறை கட்டுமானங்களை உருவாக்குதல் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பிரதான தொழிற்துறையாக உல்லாச பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன,கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் சாலித்த விஐயசுந்தர என பலரும் கலந்து கொண்டனர்.