சனி, 30 ஏப்ரல், 2016

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான இலவச உபரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில்  மேற்கொண்டு வருகின்றது. 

இதன் கீழ் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான  இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (29) வெள்ளிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்  திருமதி ந. சத்தியானந்தி தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும்  விளிபுலனற்றவருக்கான வெள்ளைப் பிரம்பும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச  உதவி பிரதேச செயலாளர் திருமதி . எல்.பிரசாந்தன் , சமுக சேவை உத்தியோகத்தர்  ஆ. சபேசன் , நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்   திருமதி . கு. இளங்கே  மற்றும்  சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும்  கலந்து கொண்டனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate