வெள்ளி, 18 நவம்பர், 2016

கிழக்குமாகாணத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் 24 மணித்தியாலங்கள் கண்காணிக்கப்படும் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அ .லதாகரன் தெரிவிக்கின்றார்

 (லியோன்)

கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மாகாண சுகாதார சேவைகளினால் உணவு பரிசோதனை நடவடிக்கைகள் கிழக்குமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .


இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அ . லதாகரன் தெரிவிக்கையில்

இதன் உணவக சோதனை நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக பொத்துவில் ,அறுகம்பை  ஆகிய பிரதேசங்களிலும் , திருகோணமலை மாவட்டத்தில்  நிலாவெளி , திருகோணமலை நகர பகுதிகளிலும்  மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழைச்சேனை , பாசிக்குடா ஆகிய பிரதேசங்களிலும் இந்த விசேட உணவு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .
 இதன் ஒரு கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை (18) மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள உணவு கையாளப்படுகின்ற உணவங்கள் , நச்சத்திர தர உணவங்கள்  வரை விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன .

இந்த பரிசோதனை நடவடிக்கையில் 35 மேற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் ,சுகாதார மேற்பார் பொதுசுகாதார பரிசோதகர்கள் , உணவு ஔடத பரிசோதகர்கள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர் .

இதன் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவைக்கையின் போது மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் உணவு தயாரிக்கப்படுகின்ற பகுதிகள் மற்றும் உணவு சேமிப்பு பகுதிகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு  எச்சரிக்கையாக   இரண்டு வார கால  அவகாசங்கள் வழங்கப்பட்டு உரிய தரத்தில் உணவகங்கள் நடத்துவதற்கான தர சான்றிதழ் பெற்றதன் பின் குறித்த  உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .   


இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து    24 மணித்தியாலங்கள் அனைத்து உணவகங்களும் கண்காணிக்கப்படுவதாகவும் , வருகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவும் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அ . லதாகரன் தெரிவித்தார் 





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate