செவ்வாய், 1 நவம்பர், 2016

மட்டு-கல்லடி பிரதேச மின் பொறியிலாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

(லியோன்)


இலங்கை மின்சார சபையின்  47 வருட நிறைவை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான முகாம்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு கல்லடி இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் காரியாலயம்  47 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்  சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு  கல்லடி பிரதேச மின் பொறியிலாளர்  காரியாலயம்  ஏற்பாட்டில்    “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில்  இரத்ததான முகாம்  இன்று  மட்டக்களப்பு   நடைபெற்றது .

மட்டக்களப்பு  பிரதேச பிரதம மின் பொறியிலாளர் திருமதி  பரமானந்தராஜா  அனிதா தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில்  மட்டக்களப்பு  கல்லடி பிரதேச மின் பொறியிலாளர்  காரியாலய  உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  க. விவேக் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.







  


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate