வெள்ளி, 31 மார்ச், 2017

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயதத்தில் இருவருக்கு 9A

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில்  கடந்த ஆண்டு நடை பெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தியை பெற்று குறித்த பாடசாலைக்கு பெருமை ஈட்டியுள்ளனர்.
Share:

ஞாயிறு, 26 மார்ச், 2017

வாசத்தின் மணம் கறுவாச்சோலையிலும் வீசியது.

(திலக்ஸ் ரெட்ணம்)
பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட கறுவாச்சோலை கிராமத்தில் தனிமையாக வசித்து வருகின்ற ஒரு தமிழ் குடும்பத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வாசம் உதவும் உறவுகளினால் அக்குடும்பத்திற்கு சூரியபடல் மூலம் ஒளிரும் மின்விளக்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கலந்துகொண்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
Share:

சனி, 25 மார்ச், 2017

மட்/ மமே / ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/ மமே /  ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி, தொழில்நுட்ப கல்வி முன்பள்ளிக் கல்வி. விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைவாகவும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் 24.03.2017 பி.ப 1.00 மணிக்கு ஆரம்பித்து பி.ப 01.30 மணிவரையும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கமைய 25.03.2017 மு.ப 7.30 மணி தொடக்கம்; மு.ப 11.00 வரை டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. இதில் அதிபர், அசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து பாடசாலை வளாகத்தினை 
துப்பரவு செய்தனர்.












 



Share:

செவ்வாய், 21 மார்ச், 2017

மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம். டாக்டர் குணராஜசேகரம்

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை விரட்டியடிக்கலாம் எனவும் போரதீவுப்பற்று பொதுச்சுகாதார வைத்திய அதகாரி வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். 
Share:

திங்கள், 20 மார்ச், 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய மாணவர்கள் 20.03.2017 இன்று திங்கட்கிழமை காலை 08.00.-09.00மணி  வரை பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு பண்ணும் சிரமதானம் இடம் பெற்றதுடன் டெங்கு நூளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள் பொது மக்களுக்கு விளக்கம்மளித்தனர்.
Share:

செவ்வாய், 14 மார்ச், 2017

ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணியளவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி K.அழகுராஜா தலைமையில் இடம்பெற்றது. முதலில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளைஞர் உறுதியுரை,வரவேற்புரை, தலைமை உரை,அதிதிகள் உரை,இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்று இறுதியாக உப செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு சுமார் மு.ப.11.30 மணியளவில் நிறைவெய்தியது.
Share:

திங்கள், 13 மார்ச், 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிவழங்கிவைப்பு

எல்லைப்புறக்கிராமமானபட்டிப்பளைபிரதேசசெயலகத்திற்குட்பட்டதாந்தாமலைநாற்பதுவெட்டைபாலர் பாடசாலைக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பாதணிகள் வழங்கும் நிகழ்வுகடந்தவெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 
Share:

கிழக்கின் இளைஞர் முன்னணியினால் மட்டக்களப்புமேற்கு,பட்டிருப்புகல்விவலயங்களில் (க.பொ.த)சாதாரணதரமாணவர்களிற்கானபரீட்சைக்குதயார்ப்படுத்தும் இலவசக் கல்விக் கருத்தரங்குகள்

மட்டக்களப்புமாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்விஅடைவுமட்டத்தினைஉயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணிஅமைப்பின் தலைவர் கணேசமூர்த்திகோபிநாத் அவர்களின் திட்டமிடலின் கீழ் பலசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் சாதாரணதரபரீட்சைசித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையினைஅதிகரிப்பதற்காகவும்,அடைவுமட்டத்தினைஅதிகரிப்பதற்காகவும்  இலவசக் கல்விக் கருத்தரங்குகளினைநடாத்திவருகின்றனர். 
Share:

மாணவர்கள் கல்வியினோடுதலைமைத்துவம்,விட்டுக்கொடுக்கும் பண்பு,ஆக்கபூர்வமானஎதனையும் தயக்கம் இன்றிசெய்யக்கூடியஆற்றல் போன்றபலதிறன்களினைவளர்துக்கொண்டாலேஎதிர்காலவாழ்வில் சிறந்தவெற்றியினைப் பெறலாம். கணேசமூர்த்திகோபிநாத்

எமதுகிழக்கின் இளைஞர் முன்னணியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இவ் இலவசக் கருத்தரங்கிற்குநீங்கள் வருகைதந்திருக்கின்றீர்கள். மட்டக்களப்புமாவட்டத்தின் பலபிரதேசங்களிற்கும் நான் விஜயம் செய்தபோதுநான் உணர்ந்தவிடயம் எமதுமாணவர்கள் பூரணமானகல்விவளத்தினைபெறுவதற்குபெரிதும் அல்லலுறுகின்றனர். பொருளாதாரம்,போக்குவரத்து,மேலதிகவகுப்புவசதிகள் போன்றவற்றில் பலதடைகளினைகொண்டிருக்கின்றனர். 

குறிப்பாக படுவான்கரைபிரதேசத்தில் பெரிதும் இப்பிரச்சினைகளைஎன்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே இவ்வாறான தடைகளை நீக்கி எமது தமிழ் சமூகத்தினையும் கல்வியில் தரம் உயர்த்துவதன் மூலம் முன்னேற்றும் நோக்கத்தில் எம்மால் இக் கருத்தரங்குகள் ஒழுங்குபடுத்தப்பட்டுநடைமுறைப்படுத்திகொண்டுவருகின்றோம். கருத்தரங்கின் மூலம் விஞ்ஞானம்,வரலாறு,கணிதம்,தமிழ் ஆகியபாடங்களில் உங்களினைதேற்சியடையவைத்து இறுதிப்பரீட்சைக்கு தயார்ப்படுத்தலே நோக்கமாகும். 11 வருடகல்விப்பயணத்தில் நீங்கள் சந்திக்கும் முக்கியமான தொருபடிக்கல்லே சாதாரணதரப் பரீட்சை,அவ் படிக்கல்லினை வெற்றிகரமாக நீங்கள் ஏறிச்செல்வதற்காகவே இக் கருத்தரங்குஎம்மால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களாகியநீங்கள் கல்விமாத்திரம் அல்லாதுஉங்கள் மத்தியில் தலைமைத்துவம்,சகோதரத்துவம்,விட்டுக்கொடுக்கும் பண்புபோன்றநற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறுவளர்த்துக் கொண்டால் மாத்திரமேநீங்களும் நாளை இவ் உலகில் சிறந்தமனிதர்களாகதிகழலாம். உங்களிடம் இருக்கும் தயக்கங்கள், கூச்சசுபாகம்,மேடைக்கூச்சம் போன்றவற்றைகளைந்தெறிந்துஆக்கபூர்வமானஎதனையும் தயக்கம் இன்றிசெய்யக்கூடியவர்களாகமாறவேண்டும். மாணவர்களாகியஉங்களிடம் இருந்துநான் எதிர்பார்ப்பதுபரீட்சையில் சிறந்தபெறுபேறுகளினை. அதனைஅடைவதற்கு இக்கருத்தரங்குகளினைசரியானமுறையில் பயன்படுத்துவீர்கள் எனநம்புகின்றேன். 

எமதுபிரதேசங்களில் காணப்படும் சிறந்தஆசிரியர் வளங்களைஒன்றிணைத்துஉங்கள் பிரதேசங்களிற்குவருகைதந்துசேவைவழங்குகின்றோம்.  'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' எனும் பழமொழிக்குஅமையசந்தர்ப்பத்தினைசரியாகபயன்படுத்துவீர்கள் எனநம்புகின்றேன் எனஇம்மாதம் 11ம், 12ம் திகதிகளில் மட்-பட்-வெல்லாவெளிகலைமகள் வித்தியாலயத்தினையும், மட்-அரசடித்தீவுவிக்னேஸ்வராவித்தியாலயத்தினையும் மையமாககொண்டு அப் பிரதேசத்தில் உள்ளபாடசாலைமாணவர்களைஒன்றிணைத்துகிழக்கின் இளைஞர் முன்னணியினரால் நடாத்தப்பட்டிருந்த (க.பொ.த) சாதாரணதரமாணவர்களிற்கானபரீட்சைக்குதயார்ப்படுத்தும் இலவசக் கல்விக் கருத்தரங்குகளில் மாணவர்களிடம் உரையாற்றுகையில் முன்ணியின்  தலைவரும் தேசியமொழிக் கற்கைள் மற்றும் பயிற்சிநிறுவனத்தின் உதவிப் பணிப்பாளருமானகணேசமூர்த்திகோபிநாத் கூறியிருந்தார்.     





Share:

ஞாயிறு, 12 மார்ச், 2017

தேற்றாத்தீவு அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி

அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் அவர்களின் ஞாபகார்தை முன்னிட்டு வெற்றிவிநாயகர் விளையாட்டு கழம் அன்னாரின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி இன்று(12.03.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை  04.00 மணிக்குதேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக்   கழக பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழக தலைவர் சந்திரு தலைமையில் ஆரம்பம் ஆகியது
Share:

வியாழன், 9 மார்ச், 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழாவானது 09.03.2017 வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இவ் விழாவிற்கு விசேட அதிதியாக மா உலககேஸ்பரன் பிரதி கல்வி பணிப்பாளர் பட்டிப்பு கல்வி வலயம் சிறப்பு அதிதிகளாக வி.திரவியராஜா கோட்டகல்வி பணிப்பாளர்  பட்டிப்பு கல்வி வலயம் மற்றும் பா. வரதராஜன் உதவி கல்வி பணிப்பாளர் ஆரம்ப கல்வி பட்டிப்பு கல்வி வலயம் ஆகியோரும் ஏனைய கௌரவ அதிதிகள் அழைப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.
Share:

புதன், 1 மார்ச், 2017

துறைநீலாவணையில் மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி விபத்து;மோட்டார் சைக்கிள் சாரதி பலி


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட துணைநீலைவணையில் புதன் கிழமை (01) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேக்கரிஉணவுப் பொருட்களைவிற்பனை செய்து வரும் முச்சக்கரவண்டி ஒன்றும், உந்துருளி ஒன்றும்  நேருக்கு நேர் மோதியதனாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate