மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/ மமே / ஈச்சந்தீவு இ.கி.மி.த வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி, தொழில்நுட்ப கல்வி முன்பள்ளிக் கல்வி. விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைவாகவும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் 24.03.2017 பி.ப 1.00 மணிக்கு ஆரம்பித்து பி.ப 01.30 மணிவரையும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கமைய 25.03.2017 மு.ப 7.30 மணி தொடக்கம்; மு.ப 11.00 வரை டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. இதில் அதிபர், அசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து பாடசாலை வளாகத்தினை
துப்பரவு செய்தனர்.



















0 facebook-blogger:
கருத்துரையிடுக