வெள்ளி, 31 மார்ச், 2017

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயதத்தில் இருவருக்கு 9A

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில்  கடந்த ஆண்டு நடை பெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தியை பெற்று குறித்த பாடசாலைக்கு பெருமை ஈட்டியுள்ளனர்.


அந்த வகையில் கடந்த ஆண்டு க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு இப் பாடசாலையில் 44 மாணவர்கள் தோற்றியிருந்தனர் இதில் சத்தியராஜா சதீபன் என்ற மாணவனும் தமிழ்செல்வன் விதுஷ் என்ற மாணவனும் 9A சித்தயை பெற்றுள்ளதுடன், ராஜேஸ்வரன் சண்மிக்கா 8A,1B யும் சாந்தகுமார் தனுஷி        8A,1C யும் சிவாஜி விதுர்யாஷியா 5A,3B,1C யும் உதயகுமார் சௌமியா 6B,2C,1S யும் ஜெயசீலன் யதுமிக்கா 5A,1B,1C,1S யும் விக்கினேஸ்வரன் ஓவியா 5A,3B யும் பெற்றுள்ளனர் என்று வித்தியாலய அதிபர் பூபாலபிள்ளை புண்ணியராஜா தெரிவித்தார்





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate