மட்டக்களப்பு நவாவற்குடா அமைந்துள்ள அனோரியா ஆங்கில அக்கடமி கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14.12.2016) வியாழக்கிழமை மாலை கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது .
இந் நிகழ்வானது இக் கல்வி நிலையத்தின் நிர்வாகியும் , ஆசிரியருமான கு . குமரேசன் தலைமையில் இடம்பெற்றது.இன்நிகழ்விற்கு பிரமத விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கலந்து கொண்டதுடன் மேலும் பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு,கவிதை,உரையாடல் மற்றும் எழுத்து பயிற்சிகள் போன்ற திறமைகளுக்கு மாணவர்களை கௌரவிப்பும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
















0 facebook-blogger:
கருத்துரையிடுக