தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது இன்று (30.04.2017) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது திருப்பலியினைதேவாலயத்தின் அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் அவர்களும் ஏனைய அருட்தந்ததைகளும் நிகழ்த்தினர் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 30 ஏப்ரல், 2017
உதயம் விளையாட்டு கழகத்தின் ஏவிளம்பி வருடத்திற்கான விளையாட்டு விழா
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு உதயம் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு விழா இன்று காலை 15 கீழ மேல் மரதன் ஒட்ட நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது பிற்பகல் உதயம் விளையாட்டு கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் கலாசார நிகழ்வுகள் கழகத்தின் தலைவர் இ.புவநேந்திரகுமார் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது.
சனி, 29 ஏப்ரல், 2017
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசாரம் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மார்ச் 21ஆம் திகதி கல்குடா,கும்புறுமூலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற மட்டக்களப்பில் உள்ள இரண்டு பிராந்திய செய்தியாளர்கள் மதுசார உற்பத்தி நிலைய கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களினால் தாக்கப்பட்டதுடன் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு துரத்தப்பட்டிருந்தனர்.இது தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும் குறித்த பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.
செவ்வாய், 25 ஏப்ரல், 2017
மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் புலனாய்வுப்பொலிஸார் களத்தில்
மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்ட நீதிபதி மா.கணேசராசாவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இவ்விவகாரத்தை பொலிஸ் புலனாய்வுத்துறையினரைப்பயன்படுத்தி நடவடிக்கையெடுக்க பிரதிபொலிஸ்மா அதிபர் முடிவு செய்துள்ளார்.
வெள்ளி, 21 ஏப்ரல், 2017
புதன், 19 ஏப்ரல், 2017
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிரமதானம்
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு திருப்பழுகாமம் விறிலியன்ற் விளையாட்டுக் கழகம் சிரமதானத்தை பழுகாமம் பொதுமயானத்தில் நடாத்தினார்கள். இச்சிரமதானப் பணியில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். வருடாந்தம் சிரமதானப்பணியை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வியாழன், 6 ஏப்ரல், 2017
தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் புதியதாக நிர்மானிக்கபடவிருக்கின்ற ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலன சபை தலைவர் ஏ.சோதிநாதன் தலைமையில் இடம் பெறவுள்ளது .
இவ் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு மாட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுக்களளின் மேலதிக செயலாளர்கள் மற்றும் இந்து மத பெரியார்கள் ஆலயங்களின் குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
செவ்வாய், 4 ஏப்ரல், 2017
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் வாழ்வாதாரஉதவிகள்
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வாழ்வாதாரஉதவிகள் முன்னாள் போராளிகள்,போரினால் கணவணை இழந்தபெண்கள்,பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எனபலதரப்பட்டவர்களுக்குஅமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இது போன்றஉதவிகள் இவ்அமைப்புதொடந்தும் பல்வேறுகிராமங்களில் முன்னெடுத்துவருகின்றது.