செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்


தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவ்விதமான தனியார் கல்வி நிலையங்கள் மீது விசாரணை நடத்தவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பல பகுதிகளில் இரவு நேர வகுப்புக்கள் நடைபெறுவதை தடுத்தல் சம்பந்தமாகவும்இ தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாகவும் இன்று இருவரினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதே பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.இதன்போது ஏற்கனவே கூறப்பட்டபடி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடத்துதல் மற்றும் மாலை 6 மணிக்கு பின்பு வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் கல்வி நிலையங்களின் இவ்வாறான செயற்பாடு காரணமாக பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதற்கு பின் நிற்கின்றனர்.இந்த நிலையில் பெற்றோர்கள் மூலமாக பொலிசாருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்ற வேளையில் மேலும் மாவட்டத்திலுள்ள பல தனியார் கல்வி நிலையங்களில் துஷ்பிரயோகங்கள்இ இரவு நேர வகுப்புக்கள்இ ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் சமூகமும் இவ்வாறான தனியார் கல்வி நிலையங்களை இனம் கண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate