![]() |
திங்கள், 24 ஜூலை, 2017
மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.
சனி, 15 ஜூலை, 2017
சர்வதேச அரிமா கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர அரிமா கழக கிளையின்; 19வது நிர்வாகத் தெரிவு
2017/2018 நிர்வாக ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி அரிமா கழகத்தின் 19வது நிர்வாகத்தெரிவு கடந்த 02.07.2017 அன்று களுவாஞ்சிகுடியில் 2016/2017 நிர்வாக ஆண்டின் களுவாஞ்சிகுடி நகர கிளைத் தலைவரும் 2017/2018 நிர்வாக ஆண்டின் Cabinet Officer Lion K.P.சாந்தசேனா – Zone chairman (zone 2, region-09) அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
ஞாயிறு, 9 ஜூலை, 2017
சனி, 8 ஜூலை, 2017
புதன், 5 ஜூலை, 2017
கட்டுப் பிள்ளையார் ஆலய சம்புரோக்ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம்
மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 05.07.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 08.07.2017 அன்று எண்ணெய்காப்பு சாத்துதலும் 09.07.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம்
திங்கள், 3 ஜூலை, 2017
ஞாயிறு, 2 ஜூலை, 2017
வேல் சாமி குழுவினர் தேற்றாத்தீவை வந்தடைந்தனர்
இலங்கையில் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து மட்டக்களப்பு காரைதீவை சேர்ந்த வேல் சாமி குழுவினர் முருனினால் ஆருளப்பட்ட வெள்ளி வேலுடன் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர்.
மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி முத்துமாரியம்மன் திருச்சடங்கு
(ரேவநிசாந்)
திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை மண்டபத்தடி பதியினிலே அமர்ந்திருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அன்னை முத்துமாரி வருடாந்த திருச்சடங்கு விழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனித்திங்கள் 19ம் நாள் 03.07.2017 திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 25ம் நாள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அன்று தீ மிதிப்பு இடம்பெற்று கன்னிமார்களுக்கான அன்ன பூசையினை தொடர்ந்து திருக்குளிர்த்திபாடி மாரியம்மன் கும்பம் சொரிந்து தீர்த்தமாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவடைய இருக்கின்றது.