வியாழன், 30 ஜூன், 2016
புதன், 29 ஜூன், 2016
செவ்வாய், 28 ஜூன், 2016
ஞாயிறு, 26 ஜூன், 2016
வெள்ளி, 24 ஜூன், 2016
வியாழன், 23 ஜூன், 2016
புதன், 22 ஜூன், 2016
அக்கரைப்பற்று மாடு அறுக்கும் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை
ஜுனைதீன் முஹம்மட் சியான்
அக்கரைப்பற்றில் மாடு அறுக்கும் தளமானது தற்போது இருக்கும் பிரதேச செயலக கட்டிடத்துக்கு பின்னால் பல வருடங்களுக்கு முன்னால் அமைய பெற்றிருந்தது.பிற்காலத்தில் மாடு அறுக்கும் தளத்தை சுற்றி மக்கள் குடியேற்றம் மற்றும் அரச காரியாலங்கள் வந்ததன் பின்னால் மாடு அறுக்கும் தளமானது அக்கரைப்பற்று 14 பிரிவுக்குள் கடற்கரையை அன்மித்த பகுதியில் அக் கால கட்டத்தில் அப் பகுதியில் மக்கள் குடியேற்றம் இல்லாத காரணத்தால் மாடு அறுக்கும் தளம் அங்கு அமைக்க பட்டு தற்போதும் அங்கு இயங்கி வருகிறது.
சனி, 18 ஜூன், 2016
மட்டு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்.
(பழுவூரான்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல் 3.00மணியளவில் கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியாவில் இந்த பொதுக்கூட்டம்
புதன், 15 ஜூன், 2016
தேனூர் பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனின் வருடாந்த திருச்சடங்கு
(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் வருடாந்த திருச்சடங்கு நேற்று(14.06.2016) செவ்வாய் கிழமை கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முகக்களை எழுந்தளப்பணும் நிகழ்வினை தொடர்ந்து கதவு திறந்தல் சடங்கு இடம் பெற்றது. இவ் திருச்சடங்கானது நேற்று ஆரம்பமாகி எதிர் வரும் சனிக்கிழமை (18.06.2016) களியாணக்கால் பூசையும் அதனைத்தொடர்ந்து (20.06.2016) திங்கள் கிழமை பின் இரவு வாளி பாடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவடையும். சடங்கு காலங்களில் அம்பாளின் திருவுருவம் தாங்கிய அலங்கார தோரண ஊர்வலம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர் வீதிகளில் பவனி வரும்.
செவ்வாய், 14 ஜூன், 2016
ஞாயிறு, 12 ஜூன், 2016
மட்டக்களப்பு மகிழூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 2016

வயல்நிலம் சூள ஒருபுறமும் நீரோடும் ஓசை மறுபுறமும் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் கிராமத்திலே குளக்கட்டில் வீற்றிருந்து மக்களிற்கு வரும் துயர்களெல்லாம் துகள்போல அகற்றி ,வேண்டும் வரமருளும் வேப்பிலைக்காரியாம் முத்துமாரியம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு 2016 14.06.2016 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20.06.2016 அன்று அதிகாலை திருக்குளுர்த்தி நிகழ்வுடன் இனிதே நிறைவுற இருக்கின்றது ..
மகிழூர்முனை மண்டபத்தடி முத்துமாரி அம்பாளின் வருடாந்த திருச்சடங்கு
(ரேவநிசாந்)
திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை மண்டபத்தடி பதியினிலே அமர்ந்திருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அன்னை முத்துமாரி அம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு விழா நிகழும் துர்முகிவருடம் வைகாசித்திங்கள் 32ம் நாள் 14.06.2016 செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக உள்ளது.
வெள்ளி, 10 ஜூன், 2016
64அடி ஆஞ்சநேயர் சிலையுடன் கலாசார மண்டபம் -பிள்ளையாரடியில் அடிக்கல் நடும் நிகழ்வு நாளை
மட்டக்களப்பு
மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடிப்பகுதியில் 63 அடிகொண்ட விஸ்வரூப
ஆஞ்சநேயர் சிலையும் கலாசார மண்டபமும் நிர்மாணிக்கும் பணிகள் நாளை
சனிக்கிழமை (11) ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆஞ்சநேய நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 6.00மணி தொடக்கம் 8.00மணி வரையுள்ளதான சுபவேளையில்பிள்ளையாரடி வளைவில் நடைபெறவுள்ளது.
ஆஞ்சநேய நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 6.00மணி தொடக்கம் 8.00மணி வரையுள்ளதான சுபவேளையில்பிள்ளையாரடி வளைவில் நடைபெறவுள்ளது.
புதன், 8 ஜூன், 2016
செவ்வாய், 7 ஜூன், 2016
பழுகாமம் கபடியில் முதலிடம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாக அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டு – திக்கோடையில் விபத்து. இளைஞர் மரணம்.
(பழுவூரான்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக்கிராமத்தில் நேற்று 06.06.2016 மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிறு, 5 ஜூன், 2016
சனி, 4 ஜூன், 2016
தமிழரின் கலை பாரம்பரியம் அழியாமல் காப்போம். கன்னன்குடா கலைஞர்கள் சூளுரை
மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றமானது தமிழர்களின் கலை கலாசாரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு கடந்த வியாழக்கிழமை 02.06.2016 மாலை கன்னகுடாவில் 'பாரத பகலிரவுப் போர்'
வெள்ளி, 3 ஜூன், 2016
ஊடகவியலாளர் பெடிகமகே மீதான தாக்குதலுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்
ஊடகவியலாளர் பேடிகமகே மீதானதாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பெடிகமகே என்பவர் மீது இன்று நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்பகின்றபோதும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
சிலர் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சம்பவங்களை வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர் என்று ஊடகவியலாளர்களையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களையும் தட்டிக்கழிக்க முனைவதன் விளைவாகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது. எனவே இதுபோன்ற சுயநலமிக்க கருத்துக்களை ஊடகவியலாளர்கள் தவிர்த்து ஊடகவியலாளன் ஒருவனுக்கு அச்சுறத்தல் ஏற்படும்போது அதற்கு பக்கபலமாக நிற்பதே ஊடகதர்மமாகும். அந்தவகையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல்கொடுத்துவரும் பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களில் சகோதரர் பெடிகமகேயும் முக்கியமானவர்.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஊடகத்துறை ஊடாக பெரும்பங்காற்றியவர் பெடிகமகே மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தக்குதலை தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் வன்மையான கண்டிக்கின்றோம். தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுக்கு வேண்டுகோள் யாதெனில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடித்து தண்டனைவழங்கி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும். இதனை செய்ய தவறும்பட்சத்தில் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துக்கொள்கின்றோம்.
வியாழன், 2 ஜூன், 2016
புதன், 1 ஜூன், 2016
ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கக்கோரிகவனயீர்ப்பு போராட்டம்.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடாத்தினர்.




















