செவ்வாய், 7 ஜூன், 2016

மட்டு – திக்கோடையில் விபத்து. இளைஞர் மரணம்.

(பழுவூரான்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக்கிராமத்தில் நேற்று 06.06.2016 மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இளைஞர்கள் ஆறு பேர் யாழ்ப்பாணம் சுற்றுப்பிரயாணம் மோட்டார் சைக்கிளில் சென்று தங்களுடைய சொந்த ஊரான திக்கோடைக்ககு திரும்பிய போது திக்கோடை பாடசாலைக்கு அருகாமையில்; வேகத்தை கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சின்ராசா சதுர்ஜன்(19) மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தால் ஊரே சோகமயமாக காணப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate