செவ்வாய், 7 ஜூன், 2016

பழுகாமம் கபடியில் முதலிடம்

(பழுவூரான்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாக அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த 04.06.2016ம் திகதி செங்கலடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பத்தொன்பது வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு இடையிலான போட்டி நிகழ்விலையே முதலாமிடம் கிடைத்துள்ளதாகவும், பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து மாணவர்கள், இதனை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் இ.புவனேந்திரகுமார்(புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜா ஆசிரியர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தேசியமட்டத்திலும் இதே போன்று இம்மாணவர்கள் சாதனைபடைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார். இம்மாணவர்கள் சென்ற வருடம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate