திங்கள், 8 ஆகஸ்ட், 2016

தேற்றாத்தீவில் வாகன விபத்து! ஒருவர் பலி


தேற்றாத்தீவில் வாகன விபத்து! ஒருவர் பலி
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் சனிக்கிழமை(06.08.2016) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.



குறித்த விபத்தில் களுதாவளை பகுதியினை சேர்ந்த 19 வயதான சுந்தரம் துஸ்யந்தன் என்பர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேற்றாத்தீவில் வாகன விபத்து! ஒருவர் பலி

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate