மட்டக்களப்பு மாவட்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தின் காரணமாக வெல்லவெளி-மண்டூர் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டமையினால் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிதமானது.
சனி, 28 ஜனவரி, 2017
வெள்ளி, 27 ஜனவரி, 2017
பணம் மோசடி செய்த நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை
பணம் மோசடி செய்த நபருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.தொழில் பெற்றுத்தருவதாக கூறி ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு கணக்கு முடக்கப்பட்ட வங்கி காசோலையினை வழங்கி ஏமாற்றிய சம்பந்தமாக நளின் குணம் என்பவருக்கு எதிராக 2013 .05.14 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
வியாழன், 26 ஜனவரி, 2017
முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்தவருக்கு - ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை
முதல் மனைவியின் பதிவு திருணத்தை மறைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டமை சம்பந்தமாக காலபடிவம் சேர்ந்த செல்வம் தயாளன் என்பருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தும் தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்பளித்துள்ளார்.
வெள்ளி, 20 ஜனவரி, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பொங்கல் விழா
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பொங்கல்விழா நேற்று (19.01.2017)வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் விமர்சையாக நடைபெற்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
வியாழன், 19 ஜனவரி, 2017
மட்/ மமே/ஈச்சந்தீவு இராமகிருஷ்ண தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ மமே/ஈச்சந்தீவு இராமகிருஷ்ண தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (2017.01.19) இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திரு.செ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.எஸ்மகேந்திரக்குமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.சோமசுந்தரம் அவர்களும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு க.பரமானந்தம் அவர்களும் ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குருக்கள் திரு.இ.அருளானந்தம் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், ஈச்சந்தீவு மீனவர் சங்க தலைவர் அவர்களும் ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய தலைவர் அவர்களும் உதயசூரியன் விளையாட்டுக்கழக தலைவர் அவர்களும் SYLC அமைப்பு உறுப்பினர்களும் 1ம், 2ம் தர மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
புதன், 18 ஜனவரி, 2017
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்கள் தலைமையில் தைப்பொங்கல் விழா சிறப்பாக இன்று (2017.01.18) புதன்கிழமை பிரதேச செயலாகத்தின் முன்றலில் இடம்பெற்றது.இப் பொங்கல் விழாவில் கோறளைப்பற்று தெற்கு உட்பட்ட ஆலய பரிபாலனசபையினர் விளையாட்டு கழகங்கள் மற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தின் ஒத்துழைப்புடன் இவ் பொங்கல் விழா இடம் பெற்றது.
ஞாயிறு, 15 ஜனவரி, 2017
தேற்றாத்தீவில் நடைபெற்ற கோதை கண்ணன் திருமண வைபவம்
திருப்பாவை விரத்தின் இறுதி நாளாகிய நேற்று சனிக்கிழமை (14.01.2017) இரவு 08.30 மணியளவில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் ஆண்டாள் கண்ணன் திருமண வைபவம் நடைபெற்றது.நாச்சியார் திருமொழிபாடலில் ஆண்டாள் குறிப்பிட்டதை போன்று ஆலய குருமார்களால் ஆண்டாள் கண்ணன் திருமணம் நிகழ்த்தி காட்டப்படது.
சனி, 14 ஜனவரி, 2017
புதன், 11 ஜனவரி, 2017
தேற்றாத்தீவில் ஒரு தசாப்த்தின் பின்னர் இடம் பெற்ற திருவெம்பாவை தீர்த்த உற்சவம்
கட்டந்த பத்து வருடங்களாக பாலஸ்தாபன ஆலயமாக காணப்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திம் குபாபிஷேகம் நடைபெற்று முடிந்த பின்னர் இம் முறை திருவெம்பாவை தீர்த்த உச்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கலந்து கொண்டனர். அந்த வகையில் நேற்று(10.01.2017) செவ்வாய்கிழமை நடராஜ பெருமானுக்கும் மாதுமை அம்பாளிற்கும் நான்கு ஜாம பூஜையும் அதிகாலையில் ஆருத்திரா தர்சனமும் இடம் பெற்றது.
செவ்வாய், 10 ஜனவரி, 2017
திங்கள், 9 ஜனவரி, 2017
மைத்திரின் மூன்றாவது ஆண்டு மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சிரமதானம்
சுபீட்சம் நிறைந்த நல்லாட்சியிக் மூன்றாவது வருட மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய வளாகத்தினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்.

























