புதன், 23 ஆகஸ்ட், 2017

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா

கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்பு புகழ்பெற்றதும் வரலாற்று தொன்மைகொண்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ முருகனின் பெருவிழா நேற்று (22) செவ்வாய் கிழமை ப்ரம்மோற்வ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
Share:

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாளை

இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.இந்த பரீட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் பங்குகொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
Share:

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா

மட்டக்களப்பு  தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்காரஉற்சவத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(11.08.2017) அன்று வாஸ்ம சபந்தியுடன் ஆரம்பமாகியது.
Share:

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு

அனோரியா அக்கடமியில் கல்வி பயின்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கும் க.பொ.த.சா.த தோற்றும் மாணவர்களுக்கு மத தலைவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஆசி வழங்கி மத தலைவர்களினால் ஜெபிக்கப்பட்ட கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று 07.08.2017) திங்கட்கிழமை மாலை 03.30 மணியளவில் கல்லடி கப்பிரல் கம்பஸ்சில் அனோரியா அக்கடமின் நிர்வாகி கு.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
Share:

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கல்லடி – டச்பார் புனித இன்னாசியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

(லியோன்)

 மட்டக்களப்பு  கல்லடி – டச்பார் புனித இன்னாசியார்  ஆலய வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது 
.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இன்னாசியார் ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 29.07.2017 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி ரோஷன்  தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . 
Share:

பௌர்ணமி தினமான இன்று இரவு வானில் நிகழவுள்ள அதிசயம்

பௌர்ணமிதினமான இன்று 8ஆம்திகதி சந்திர கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று ஆதர்சிகிளார்க்மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 
Share:

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழா முதன்முறையாக நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
Share:

சனி, 5 ஆகஸ்ட், 2017

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் வரலக்ஷ்மி பூஜை



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நேற்று வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
Share:

அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி தேற்றாத்தீவு வடபத்திரகளி அம்பாள் ஆலயத்தில்

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Share:

Arayampathy building collapse- number of injured rises

The number of injured following the collapse of a building at a place of worship in Aarayampathy, Batticaloa has risen to 20. Police said that twelve of the injured are receiving treatment at the Aariyampathy hospital. Eight people who were critically injured have been transferred to the Batticaloa Hospital. Police are continuing investigations into the incident.
Share:

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் - கோவிந்தன் கருணாகரன்

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் நீடிக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11பேர் உட்பட தமிழ் உறுப்பினர்கள் அனைவரது ஆதரவினைக்கொண்டு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி - உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியின் வரலாற்று சாதனையாளர் நிகழ்வு (03) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக எஸ்.வியாழேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் ஏழு வாரங்களில் முடிவுற இருக்கின்றது.அதன் பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியாத நிலையிலேயே நாங்கள் உள்ளோம்.
கிழக்கு மாகாண மக்கள் ஐந்து வருடங்களே மாகாணசபைக்கு ஆணையினை வழங்கியுள்ளனர்.அந்த ஐந்துவருடம் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

கிழக்கு மாகாணசபையின் ஆயட்காலம் நிறைவடைந்ததும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.மக்கள் ஆணையினை மீறிச்செயற்படுவதற்கு எவருக்கும் இடமில்லை.
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி நடாத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்கள் வாழ்கின்ற நிலையில் அவற்றில் மிகவும் குறைந்த நிலையில் உள்ள சிங்கள மக்களில் ஒருவர் ஆளுனராகவுள்ளார்.அத்துடன் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவராக இருக்கின்றார்.

ஆளுனர் ஆட்சி நிலவும்போது மாகாணசபையின் தவிசாளர் அடுத்த தேர்தல் வரும் வரையில் அதிகாரத்தில் இருப்பார்.அவரும் பெரும்பான்மையினத்தைசேர்ந்தவர் என்பதுடன் அவர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கின்றார்.
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆட்சி அதிகாரங்கள் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி இரண்டு பெரும்பான்மையினத்தவர்களின் கைகளில் இருக்கப்போகின்றது.இந்த நிலைமை ஏற்பட இடமளிக்ககூடாது.

அண்மையில் ரணில் மட்டக்களப்புக்கு வந்தபோது கிழக்கு மாகாணசபை இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும் என்றும் அதற்கு நான் ஆதரவு வழங்கியதாகவும் சில இணையத்தளங்கள் எழுதியிருந்தன.
ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தமிழ் மாகாணசபை உறுப்பினர்களில் எவரும் வாய்திறக்காத நிலையில் நான் மட்டுமே கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை உட்பட படுவான்கரை பகுதியில் போர்காலப்பகுதியில் எதுவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை,தற்போதைய காலத்தில் அபிவிருத்திகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது.படுவான்கரையினை மையப்படுத்தியதான அபிவிருத்தியை நோக்காக கொண்டு மாகாணசபைக்கு விசேட நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கோரினேன்.

அத்துடன் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் மட்டக்களப்பு வாவி பிரிக்கின்றது.படுவான்கரை பகுதி மக்களின் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்படவேண்டும். மண்முனை பாலம்,பட்டிருப்பு பாலம்,வலையிறவு பாலம் ஊடாக மட்டுமே மக்கள் விரைவான போக்குவரத்தினை செய்யமுடியும்.மேலதிகமாக இரண்டு பாலங்களை வாவிக்கு குறுக்கே அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் ரணிலிடம் முன்வைத்தேன்.இதனை நான் மட்டுமே வலியுறுத்தினேன்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11ஆசனங்களைக்கொண்டுள்ளது, அத்துடன் ஏனைய மூன்று தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களுடன் 14 தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். கிழக்கு மாகாணசபையின் காலம் நீடிக்கப்படுமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த ஆட்சியில் இருக்ககூடாது.

இரண்டரை வருடகாலம் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் அதில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின்ஆட்சி அதிகாரம் நீடிக்கப்படுமாகவிருந்தால் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் தமிழருக்கு வழங்கப்படவேண்டும் என்பதுடன் அமைச்சரவையிலும் முக்கிய மாற்றங்களை செய்யவேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்யமுடியும் என்பதுடன் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஓரளவு பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.

Share:

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஆதியூர் அம்பிளாந்துறை அருள்மிகு ஶ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா-2017


மட்டு வாவிக் கரையோரம் வளம் குன்றா சென் நெல்லும் ,வற்றாத பொய்கையுடன் வனமிகு கண்டல்களும் கத கதப்பாய் காற்று வீச அரச மர நிழலில் அமர்ந்திருந்து அருள் புரியும் ஆதியூர் அம்பிலாந்துறை அருள் மிகு சிவமுத்துமாரி அம்மன் திருச்சடங்கில் 03/07/2017ம் திகதி உலகளந்த மாரி ஊர் சுற்றி கிராம மக்களுக்கு அருள் பாலிக்கும் அற்புத திரு ஊர்வல திருவிழா இடம் பெற இருக்கின்றது.
Share:

புதன், 2 ஆகஸ்ட், 2017

நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்

போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
Share:

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வெஸ்ட் என்டன் பல்கலைக்கழகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார்.

இலண்டனின் முதற்தர நவீன பல்கலைக்கழகமாக 2018 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டதும்  மகாராணி விருது உட்பட பல்வேறு விருது வென்றதுமான வெஸ்ட் என்டன் (West) பல்கலைகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை (LLM in International Commercial Low ) பட்டத்தை மட்டக்களப்பு நீதாவான்  நீதிமன்ற நீதிபதியும்,மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார்.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate