சனி, 31 அக்டோபர், 2015

காட்டுக்குள் மலசலம் கழிக்கச் சென்ற சிறுவன் மரணம்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வெள்ள நீரில் மூழ்கி 16 வயது சிறுவனொருன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிரான் புதிய கொலனியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி விஜய் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
வீட்டைச் சுற்றி மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வீட்டுக்கு சற்று அருகிலுள்ள காட்டுக்குள் மலசலம் கழிப்பதற்குச் சென்றிருந்த வேளை தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மலசலம் கழிக்கச் சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பாததையடுத்து இவரது சகோதரி தேடிச் சென்றபோது இவர் தண்ணீரில் முகம்குப்புற வீழ்ந்து கிடந்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். ஏறாவூர்ப் பொலிஸ் சார்ஜன் ஏ.இசட்.ஹஸன் சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
Batti kiran 01
Share:

மாணவர்கள் மீது பொலிசாரின் தாக்குதலைக் கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Share:

சிறுநீரகங்கள் பாதிப்பு; உதவுமாறு கோரிக்கை

அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் தேவ கிராமத்தை (அளிக்கம்பை)  பிறப்பிடமாகவும் கொண்ட மோட்டார் வாகன திருத்துனரான சுதர்சன் என்று அழைக்கப்படும் கந்தசாமி, 2 மற்றும் 5 வயது இரு குழந்தைகளின் தந்தையாவார். 

இவருக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்ட்ட நிலையில் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தற்போது மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

இவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு கருணையுள்ளம் கொண்டவர்கள் ஒரு சிறுநீரகம் தந்துதவுமாறு (O Group) கோரியுள்ளார்.  இல்லாது விடின் சிறுநீரகம் தருபவர்களுக்கு (சுமார் 20 இலட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது) இவ்வளவு பெருந்தொகையினை உடனடியாக சேர்க்க வேண்டியுள்ளது. அத்துடன், பின்தங்கிய கிராமத்தில் மிகவும் ஏழையாக வாழ்கின்ற எங்கள் குடும்பத்துக்கு உங்களால் முடிந்த உதவியினை சுதர்சனின் மனைவியான தா.வி.இன்பமலர் (ஹற்றன் நெஷனல் வங்கி இல: 078020156029)  என்ற இலக்கத்துக்கு அனுப்புமாறும் அல்லது மேலதிக தகவலுக்கு அலைபேசி எண் 0770520252 எனும் இலக்கத்துடன், தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார். 
Share:

மார்பகப் புற்று நோய் பற்றி பெண் உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு


மார்பகப் புற்று நோய்கள் மற்றும் இன்ன பிற தொற்றா நோயங்கள் பற்றி பெண் உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது. 


அலுவலகங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் குறிப்பாக ஆசிரியைகளிடத்தில் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதன் காரணமாக இத்தகைய மார்பகப் புற்று நோய்க்கும் இன்ன பிற தொற்றா நோய்களுக்கும் பெண்கள் ஆளாகும் வீதம் அதிகரித்திருப்பதாலேயே இந்தநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்ததாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார். 

கல்வி கற்ற பெண்களுக்கூடாக இந்த மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு சமூகத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுததவதாக தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் விஜி திருக்குமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம். திருக்குமார், அம்பாறை வைத்திய சாலையின் புற்று நோயியல் வைத்திய நிபுணர் ஏ. இக்பால் மற்றும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் ஆகியோர் மார்பகப் புற்று நோய் உட்பட இன்னபிற தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வையும் முன் எச்சரிக்கை அறிவுரைகளையும் வழங்கினர். 

இக்கருத்தரங்கில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெண் உத்தியோகத்தர்கள், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
Share:

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

கந்தளாய் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் மரணமடைந்தவர் ஏ.எம்.நஜீப் (சவுக்கத்தலி) எனும் 44 வயதுடைய ஒருவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. 

இவர் கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது, காட்டு யானைகள் இவரை சூழ்ந்து தாக்கியுள்ளன. 

இதனால் படுகாயமடைந்த அவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். 
Share:

மலசல கூட குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலி

காத்தான்குடி - ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (30) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

தனது வீட்டினுள் இருந்து வெளியில் சென்ற குழந்தை வெகு நேரம் திரும்ப வராததால் உறவினர்கள் தேடியுள்ளனர். 

இதனையடுத்து சிறுமியின் தயாராது மூத்த சகோதரியின் வீட்டில் நீர் நிரம்பி இருந்த மலசல கூட குழியில் இருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அங்கு மரணமடைந்துள்ளார். 

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 





Share:

இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் கௌரவ பா.உ ஸ்ரீநேசன் ஆசிரியருக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரீநேசன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) பிற்பகல் 4.00 மணிக்கு இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் கடந்த 1993.07.15 முதல் 2004.04.11  வரை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் சிரேஸ்ட ஆசிரியராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 48,221 என்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார்


Share:

கொழும்பு - மட்டக்களப்பு கடுகதி ரயிலில் மோதுண்டு முதியவர் பலி –கருவப்பங்கேணியில் சம்பவம்

(BNN நிருபர் மயுரன்) கொழும்பு - மட்டக்களப்பு கடுகதி புகையிரததத்தில் மோதுண்டு 79 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியானவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 79 வயதுடைய மூத்ததம்பி வடிவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள கருவங்கேணி ஊடாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் குறித்த நபர் மோதுண்டு பலயாகியுள்ளார்.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







Share:

வெள்ளி, 30 அக்டோபர், 2015

களுவாஞ்சிகுடியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி -இளைஞன் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Share:

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
Share:

சிவானந்த தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் .

(லியோன் )  

தேசிய வாசிப்பு மாதத்தின்  இறுதி நாள் நிகழ்வுகள்   இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையின்   அதிபர் கே . மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது .
Share:

சர்வதேச சிறுவர் மற்றும் பெண்பிள்ளைகள் தினமும் முதியோர் வார நிகழ்வு

லியோன் ) மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு மற்றும் சமூக சேவைகள் கிளை ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் பெண்பிள்ளைகள் தினமும் முதியோர் வாரமும்  இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .    


Share:

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தினை இல்லாமல் செய்ய உதவி –அவுஸ்ரேலியா

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தினை இல்லாமல்செய்வதற்கான உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா அரசாங்கம் முன்வந்துள்ளது.
Share:

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம்


மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறைச்சாலையில் தாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருவதாகவும் தமக்கு நீதி வேண்டும் எனக்கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறைச்சாலையில் தாங்கள் துன்பங்களை அனுபவித்துவருவதுடன் தம்மை பார்க்கவரும் உறவினர்களும் கெடுபிடிகளுக்கு உள்ளாவதாக போராட்டத்தில் பங்குகொண்டோர் தெரிவித்தனர்.

சிலருக்கு சிறைச்சாலையில் பல சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல இவர்கள் கப்பம் பெற்றமை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலையைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதோடு போராட்டக் காரர்களை கீழிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





Share:

வானிலை முன்னறிவிப்பு, சபாலா சூறாவளி

 30.10.2015ம் திகதி மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு.

இலங்கையின் மேற்குத் திசையில் காணப்பட்ட வளிமண்டலக் குழப்பமானது இலங்கையைவிட்டு அப்பால் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் மழை காணப்படும். பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று சற்றுப் பலமானதாக வீசும். பொதுமக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

சபாலா சூறாவளி

கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது மிகமிக வலுவான சூறாவளியாக (Extremely Severe Cyclonic storm) உருவெடுத்துள்ளது. 

இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது தற்போது இந்திய மும்பை நகரிலிருந்து மேற்கு-தென்மேற்காக 1390 கிலோமீற்றர் தூரத்திலும் ஓமான் நாட்டின் சலலா  பிராந்தியத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 780 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது. 

இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, மிகமிக வலுவான சூறாவளியாக உருவெடுத்து. வட ஜெமென் நாட்டிற்கும் ஓமான் நாட்டிற்கும் இடையே எதிர்வரும் நொவெம்பர் 02ம் திகதி நள்ளிரவு ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடல் பிரதேசத்திலிருந்து நிலப்பிரதேசத்திற்குள் நுளைந்தபின் இதன் வேகம் படிப்படியாகக் குறைவடையும். சூறாவளிக் காற்றின் வேகமானது மணிக்கு 115 கிலோமீற்றர் முதல் 135 கிலோமீற்றர் வரை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச வளிமண்டல அமுக்கமானது 988 ஹெக்கர் பஸ்கல் (988ர்pய) ஆக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.


க.சூரியகுமாரன்,

வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்
Share:

காடைத்தனமான அரசியலை ஒருபோதும் செய்யப் பணிக்காதீர்கள் -காத்தான்குடியில் முதலமைச்சர்

பாடசாலைக்குள் அரசியல் செய்யும் கலாச்சாரம் உடைத்தெறியப் படவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நிகழ்வில் ஆய்கூடத்தைத் திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுக்கின்ற முதலமைச்சராக ஒருபோதும் நான்  இருக்கமுடியாது. எந்தவொரு அதிகாரமாக இருந்தாலும், அதை விட்டுக்கொடுக்க முடியாது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. எனது முதலமைச்சர் காலத்தில் எந்தவொரு அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கூறி வருகின்றேன்.

நியாயமான காரணமில்லாமல் எந்தவொரு ஆசிரியரையும் இலகுவாக இடமாற்ற முடியாது. இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நடக்கவேண்டும்.

நான் உட்பட எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும், பாடசாலைக்குள் அரசியலைக் கொண்டுவரக்கூடாது. அதற்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழு வேண்டும்.

முழு அதிகாரமும் மாகாண சபைக்கு இருக்கின்றது. எந்தவொரு அரசியல்வாதிக்கும் வழங்கப்படும் நிதி அவர்களுடைய சொந்த நிதியல்ல. மக்களுடைய நிதி என்பதை புரிந்துகொள்ளும் அரசியல் தலைமைகளாக மாறவேண்டும்.

நாகரிகமான அரசியல் கலசாரத்தை செய்ய வேண்டும். மிகவும் மன வேதனைப்பட வேண்டிய விடயமானது இந்தப் பாடசாலையில் இரவோடு இரவாக வந்து திறமையைக் காட்டியது போன்று,  மாணவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஆய்வுகூடத்திற்கு எண்ணெய்; ஊற்றுவது, கதவை உடைப்பது என்பது என்ன அரசியல் கலாசாரம் என நான் கேட்கின்றேன். இந்தப் பாடசாலைக் கட்டடத்தை நான் வந்து திறப்பதற்கு ஏற்ற மாதிரி இதை மாற்றியிருந்தீர்கள் அதற்காக நான் நன்றி கூறுகின்றேன்' என்றார்.  


Share:

செட்டிபாளையத்தில் மீனவர் தங்குமிட கட்டிடம் திறந்து வைப்பு

செட்டிபாளையத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மீனவர் தங்குமிடக் கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
முஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்து அரசியலை கற்றுக் கொண்டு, தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அழுத்தங்களை கொடுத்து பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் அரசியல்வாதிகள் பேசி பேசியே இன்றும் பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றனர் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிவரும் நாட்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுப்பாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
Share:

மூதூரில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வர்த்தக கண்காட்சி

உள்ளூர் உற்பத்தி பொருட்களின் வர்த்தக கண்காட்சியும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) திருகோணமலை மூதூர் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு WE EFFECT நிதி அணுசரனை வழங்கியிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A.புஸ்பகுமார, மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் WE EFFECT  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, கிண்ணியா, மூதூர், வெருகல், சேருவில மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்த உள்ளுர் உற்பத்தியாளர்களது உற்பத்தி பொருட்கள் கண்காட்சிப்படுத்தப்பட்டதோடு கலை நிகழ்வுகளுடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றது.
கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரசாங்க வேலைகளை எதிர்பார்க்காது இவ்வாறான சுய தொழில்களை மேற்கொள்வதன் ஊடாக கூடிய வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான கடன் வசதிகள் சந்தைப்படுத்தல் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இக்கண்காட்சியானது நாளை மற்றும் நாளை மறுதினமும் நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
DSC_4073

Share:

கைத்தறி நெசவு நிலையத்தை பார்வையிட்டார் : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

மட்டக்களப்பு - காங்கேயனோடையில் ஒஸ்க்பாம் நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் கைத்தறி நெசவு நிலையத்தினைப் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டுள்ளார்.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate