குச்சவெளி காசிம் நகரைச் சேர்ந்த நான்கு வயதுடைய ரிசாட் என்ற பிள்ளையின் இருதய சத்திர சிகிச்சை செலவுக்காக சிவன் பவுன்டேசன் அமைப்பின் தலைவர் வே. கணேஷ்வரன் ஒரு இலட்சம் நிதி அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு இந்திய கண்டி முஸ்லிம் நட்புறவு அமைப்பின் அக்குரணை அலுவலகத்தில் 25-10-2015 நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவன் பவுன்டேசன் அமைப்பின் தலைவர் வே. கணேஷ்வரன கலந்து கொண்டு காசோலையை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் குச்சவெளி ஆயுர் வேத வைத்தியசாலையின் வைத்தியதிகாரி டொக்டர் பிரதீப் குமார், இந்திய கண்டி முஸ்லிம் நட்புறவு அமைப்பின் ஐ. ஐனுடீன் உள்ளிட்டவர்களையும், நான்கு வயது பிள்ளையின் பெற்றோர்கள் மற்றும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.









0 facebook-blogger:
கருத்துரையிடுக