காத்தான்குடி – அந்-நாசர் வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாத சிலர் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மஹிந்தோதய ஆய்வு கூட கட்டிடம், தொழில்நுட்ப ஆய்வு கூடமாக பெயர் மாற்றப்பட்டு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் இன்று திறக்கப்படயிருந்தது.
இந்த நிலையிலேயே இந்த கட்டிடத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஹாபீஸ் நஷிர் அஹமட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ள அதேவேளை, திறப்பு விழாவை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு வருகைத் தந்த பொலிஸார் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோரினால் வெவ்வேறாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்று விழா நடைபெறவிருந்த கட்டிடத்தின் முன்கதவு உடைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடத்திற்கு தார் வீசப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






0 facebook-blogger:
கருத்துரையிடுக