பலவருடங்களாக குண்டும் குழியுமாகக் காட்சியளித்த ஏறாவூர் புன்னைக்குடா வீதியினை நேற்று மாலை 28.10.2015 கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கையினை ஏற்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி அவர்களின் பங்கு பற்றுதலுடன் அவ்வீதிக்கு அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.
மாகாண சபையின் PSDG நிதியான 3.8 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியிலேயே இவ்வீதி புணரமைப்புச் செய்யப்படவிருக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன், அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் மகிந்திரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்,எல்.எம்.ஹனீபா ஆகியோருடன் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.













0 facebook-blogger:
கருத்துரையிடுக