(BNN நிருபர் மயுரன்) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கான ஒரு நாள் தியான பயிற்சி முகாம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உலக வாழும் கலைகள் நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியான தென்னியந்தியாவைச்சேர்ந்த கணேஸ் குருஜீ தியானப்பயிற்சியை நடாத்தி வைத்தார்.
சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.பிரபாகரன் வாழும்கலைகள் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சட்டத்தரணி கே.சிவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமளிவிலான சிறைக்கைதிகள் தியான பயிற்சியில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.








0 facebook-blogger:
கருத்துரையிடுக