நாட்டில் நடந்த சிவில் போரின் காயங்கள் இன்றும் காணப்படுகின்றன. ஆசியாவின் மிக நீண்ட சிவில் யுத்தத்தில் படைகளை சேர்ந்தவர்கள் தமது தாய் நாட்டுக்காக உயிர்களை தியாகம் செய்தது போன்று போரில் வடக்கு கிழக்கை சேர்ந்த அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பல்வேறு குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், 1990 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கத்திடம் கொழும்பில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை செவ்வி கண்டு வெளியிட்டுள்ளது.
இதுவரை காணாமல் போனோர் பட்டியலில் இருக்கும் நபர்கள் முகாமில் இருந்தவர்கள் எவ்வாறு வெளியில் கொண்டு செல்லப்பட்டனர் குறித்து அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - உண்மையில் அன்று என்ன நடந்தது?
பதில் - இந்த சம்பவம் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் இன்னும் என் நினைவில் உள்ளது.
செங்கலடி கிராமத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான் சிரேஷ்ட விரிவுரையாளர், அந்த கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
அவர்களில் சுமார் 150 குடும்பங்கள் அகதி முகாமில் இருந்தனர். ஒரு நாள் அங்கு வந்த இராணுவத்தினர் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்து சோதனையிட்டனர்.
இதன் பின்னர் அவர்கள் பலவந்தமாக பஸ்களில் ஏற்றப்பட்டு வெளியில் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எம்.எஸ்.எப் அமைப்புகள் நலன் கவனிப்பவர்களாக இருந்தனர்.
அந்த நேரத்தில் 25 குழந்தைகள் பிறந்ததுடன் 15 பேர் இறந்திருந்தனர். மேலும் 18 பேர் முகாமில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டனர்.
படிப்படியாக முகாமில் இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்து போனது, இதனையடுத்து செப்டம்பர் 30 ஆம் திகதி முகாம் மூடப்பட்டது. இறுதியாக வாக்குறுதியுடன் நான் முகாமில் இருந்து வெளியேறினேன்.
முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது யாருக்கும் தெரியாது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
கேள்வி - சில சந்தர்ப்பங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நடக்கவில்லையா?.
பதில் - நான் அவர்கள் அனைவரையும் புலிகள் என்று கூறினேன். எவரும் எதனையும் கூறலாம். வழமையாக சிலர் முன்னிலையில் மக்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், என்னை தவிர அந்த நிலைமையை பார்த்த சாட்சியாளர் எவருமில்லை. பேராசிரியர் மனோ சபாரத்தினம், டி. சிவலிங்கம் எவரும் இல்லை. அடுத்த 20 வருடங்களில் நான் இறந்து விடுவேன். அதற்கு பிறகு யார் சாட்சி?
கேள்வி – அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா?.
பதில் – சிலர் வந்து ஒருவர் அந்த இடத்தில் இருக்கின்றார். இன்னுமொருவர் வேறு இடத்தில் இருக்கின்றார் என்று கூறுகின்றனர். ஆனால் என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை.
கேள்வி – எந்தளவுக்கு இந்த சம்பவங்கள் உங்களை பாதித்தது?.
பதில் – நான் மாத்திரமல்ல, யுத்தத்தை கடந்தது சென்ற எவருக்கும் அந்த அதிர்ச்சி இருக்கும். இரவு நேரங்களில் முகாம் குறித்த ஞாபன கனவு எனக்கு ஏற்பட்டால், நான் நித்திரையில் இருந்து எழுந்து விடுவேன்.
கேள்வி – பிரச்சினை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்காது பின்நோக்கி சென்றீர்கள்?.
2004 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நான் இந்த விடயங்களை முன்வைத்தேன்.
சம்பவம் நடந்த நாளில் முகாமுக்கு வந்த அனைத்து இராணுவ அதிகாரிகளின் பெயர்களை நான் முன்வைத்தேன். சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு முகாமுக்கு வந்த இராணுவ மேஜர் ஜெனரலும் அதில் அடங்குவார்.
காணாமல் போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய 2014 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு முன் நான் சென்றிருந்த போது, தாம் அது பற்றி அறிந்திருக்கவில்லை எனக் கூறியதால்,
நான் ஆச்சரியமடைந்தேன். எதற்கு இந்த ஆணைக்குழு?. குறைந்தது அவர்கள் முன்னறிவிப்பு மற்றும் தொடர்ச்சியை அறிந்திருக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.
கேள்வி – நீங்கள் அரசாங்கத்திடம் என்ன கேட்கிறீர்கள்?
பதில் – உறவினர்கள் தாம் நேசிப்பவர்கள் திரும்பி வந்து விடுவார்கள் என்று தற்போதும் பூஜை செய்து வருகின்றனர்.
அவர்கள் இன்னும் பல நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். குறைந்து, கொண்டு செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் என்றாவது இந்த மக்களிடம் கூறுங்கள்.
உண்மை கடும் வேதனையாக இருந்தாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது மனதை தேற்றிக்கொள்ள முடியும். அரசாங்கத்தினால் என்ன செய்து விட முடியும்?.
இழப்பீடு கொடுக்க முடியுமா?. இழப்பீடுகளை வைத்து கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?
இது காணாமல் போனவர்களுக்கு மாத்திரமல்ல. மனிநேயம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மை ஆகியவற்றும் முக்கியமானது.
இதுவே இதற்கான சரியான தருணம் இல்லையென்றால் சதாகலாமும் நாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம். உண்மையை மறைக்கும் போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவையும் பாதுகாப்புச் செயலாளரையும் பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம் கூறியுள்ளார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக