வியாழன், 16 ஜூலை, 2015

தனுசின் “மாரி” திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இளைஞர்கள் செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்

புதிதாக வெளிவந்திருக்கும் தனுசின் “மாரி” திரைப்படத்தில் அதிகளவான சிகரட் பிடிக்கும் காட்சி புகுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தனுசின் படத்துக்கு செருப்பு மாலையும் அணிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.


சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை நடாத்தினர்.
மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்றதுடன் பெருமளவான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

இளம் சமூகத்தின் மத்தியில் புகையிலை பழக்கத்தினை ஒழிக்கவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சினிமா மூலமாக இவ்வாறான மக்கள் விரோத போக்குகளை வெளிப்படுத்துவதை கண்டிப்பதாக இங்கு கலந்துகொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.





















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate