மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மின்சார வசதியற்று இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் ஞாயிறன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மொத்தமாக 24948 வீடுகள் மின்சார வசதியற்று உள்ளன.
இவற்றில், 2466 வீடுகள் மின்சார வசதி கிடைப்பதற்கான மின் விநியோக மார்க்கங்கள் அற்ற இடங்களில் உள்ளன. மேலும் 22482 வீடுகள் மின்விநியோகம் உள்ள பகுதிகளில் இருந்த போதும் வறுமை காரணமாக அவர்கள் வீட்டில் மின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்தக் கணக்கெடுப்பின்படி ஆகக் கூடுதலாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 4270 குடும்பங்களும், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 4157 குடும்பங்களும் கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 3432 குடும்பங்களும், மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 3039 குடும்பங்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2562 குடும்பங்களும் மின்சார வசதியற்று வாழ்கின்றன.
இக்குடும்பங்கள் மண்ணெண்ணெய் மற்றும் விறகை நம்பியே காலங்கழிக்கிறார்கள்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக