ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மாங்காட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் முச்சக்கர வண்டியும் பஸ்ஸ{ம் மோதியதன் காரணமாக இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் மாங்காடு தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ்ஸ{ம் களுவாஞ்சிகுடியில் இருந்து மாங்காடு சென்ற முச்சக்கர வண்டியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மாங்காட்டை சேர்ந்த கே.ஜுலியன் (34வயது), எஸ்.நிசாந்தன்(26வயது)ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்தலத்துக்கு விரைந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate