மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலய நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயம் நாடாத்திய முத்தாரம் கலை நிகழ்வு செங்கலடி மத்திய கல்லுாரி மண்டபத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவர்களுடன் அழைப்பு அதிதிகளாக கல்குடா வலயத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி பி.இளங்கோ, முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி க.தவராஜரெட்ணம், வேல்ட்விசன் லங்கா நிறுவனத்தின் வலய முகாமையாளர் அலெக்ஸ் பெஞ்சமின், செங்கலடி பிரதேச முகாமையாளர் ஜீ.ஏ.சுரேஸ், வாகரை பிரதேச முகாமையாளர் பொனி வின்சன்ட் மற்றும் கிரான் பிரதேச கல்விக்கான இணைப்பாளர் திருமதி கவிதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கல்குடா கல்வி வலய பாடசாலைகளின் கலை இலக்கிய நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக