எமது நாட்டில் இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் நாகரின் பண்பாட்டு சின்னங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் பேராதனை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவாரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் எமது நாட்டில் இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் நாகரின் பண்பாட்டு சின்னங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சென்ற வருடம் நவம்பர் மாதம் முதலாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாகர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மற்றும் வேறு சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
ஓமந்தை முதலியாகுளத்தில் பலம் வாய்ந்த நாக அரசனின் இராசதானி இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. பாலமோட்டை முதலான வேறு பல இடங்களிலும் இப்போது வழிபாடுகளுக்கு வைக்கப்பட்டுள்ள கற்களை பார்க்க சென்றபோது அவற்றில் எல்லாம் தமிழ் கல்வெட்டுக்கள் இருப்பதை கண்டனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.








0 facebook-blogger:
கருத்துரையிடுக