இலங்கை ரயில் சேவையின் மற்றுமொரு முக்கிய ரயில் நிலையமான மட்டக்களப்பு ரயில் நிலைய சேவைகளின் நேரங்கள், இன்று (12) முதல் மாற்றமடைவதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அலீபா தெரிவித்துள்ளார்.
அதன்படி மட்டக்களப்பிலிருந்து
காலை 7.30 இற்கு புறப்பட்ட உதயதேவி காலை 6.10 இற்கு புறப்பட்டு பி.ப. 3.15 இற்கு கொழும்பு கோட்டையை அடையும்.
மாலை 5.30 இற்கு புறப்பட்ட உதயதேவி மாலை 5.20 இற்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 3.30 இற்கு கொழும்பு கோட்டையை அடையும்.
இரவு 8.30 இற்கு புறப்பட்ட பாடும் மீன் அதிவேக ரயில் இரவு 8.15 இற்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.53 இற்கு கொழும்பு கோட்டையை அடையும்.
காலை 10.30 இற்கு மாகோ சந்தி வரை செல்லும் ரயில் காலை 10.15 இற்கு புறப்பட்டு மாலை 5.30 இற்கு மாகோ சந்தியை அடையும்.
அதன் அடிப்படையில் கொழும்பிலிருந்து
இரவு 7.15 இற்கு புறப்படும் பாடும்மீன் அதிவேக இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 3.55 இற்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 9.45 இற்கு புறப்படும் ரயில் 9.30 இற்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.55 இற்கு மட்டக்களப்பை வந்தடையும்.







0 facebook-blogger:
கருத்துரையிடுக