வியாழன், 31 மார்ச், 2016
செவ்வாய், 29 மார்ச், 2016
திங்கள், 28 மார்ச், 2016
பழகாமம் வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய நூல்களின் வெளியீடு
வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு - திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுள்ளென்ற சூரியநேர்மை எனும் கவிதை நூல் மற்றும் கூடி விளையாடுவோம் எனும் சிறுவர் நாடக நூல் ஆகியவை இன்று வெளியிடப்பட்டன.
ஞாயிறு, 27 மார்ச், 2016
மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டி
மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது
ஈச்சந்தீவு உதயசூரியன்
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதற்கு மண்முனைமேற்கு பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் பி.பூபாலராஜா தலைமை தாங்கினார் இவ் விளையாட்டில் முதலாம் இடத்தினை ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தினை விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதற்கு மண்முனைமேற்கு பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் பி.பூபாலராஜா தலைமை தாங்கினார் இவ் விளையாட்டில் முதலாம் இடத்தினை ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தினை விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது
இலவச சமய தீட்சை – தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்
இலங்கையில் மிக உயரமா பிள்ளையார் சிலையினை உடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03.04.2016) அன்று காலை 08.30 சைவ சமய தீட்சை இலவசமாக வழங்கபட்டவுள்ளது இதனை சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்கள் அவர்களும் இந்தியா ஸ்ரீ இராமேஸ்வரம் ஆலயத்தின் பாரம்பரிய அர்ச்சகர் பக்க்ஷி.சிவராஜன் அவர்களும் வழங்கி வைக்கவுள்ளனர்.இவ் சைவ சமய தீட்சை பெறவிரும் அடியார்கள். தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்யவும்.0770348559/0757926321.
வெள்ளி, 25 மார்ச், 2016
மகிழூர் கிராமத்தில் சிரமதான நிகழ்வு
(இ.சுதா)
ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய வர்த்தக வணிக துறை அமைச்சின் நிபுணத்தவ ஆலோசகருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டிலும் இமகிழுர் கிராம ஆலயங்களின் ஒத்துழைப்புடனும் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை காலை7மணி முதல் 11 மணிவரை மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழூர் கிராமத்தில் நடைபெற்றது.
தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவை பாதை
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைபாதை இன்று(25.03.2016) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு ,தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு தேவாலயத்தை வந்தடைந்தது. இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்ததினமாக பெரிய வெள்ளிக் கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் - கி.மா.உ. சிப்லி பாறுக்
இஸ்லாமியர்கள் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து மதமாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை இரண்டு வாரங்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்வேன்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை(22)இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'நல்லாட்சியில் இன உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் செயற்பட்டுவரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிலர் இவ்வாறான இனவாத கருத்துகளை தெரிவித்து வருவது இன ஐக்கியத்தை பாதிக்கும் செயற்பாடாகும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் துவேசங்களை கதைத்து வாக்குகளைப்பெறும் நடவடிக்கையை மஹிந்த தரப்பினர் மேற்கொண்டுவருவது போல், மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பிலான துவேசங்களை கதைத்து வாக்கு பெறும் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்' என்றார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு
நிலைமாறு கால நீதியை வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், விழுதின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகத்தர் பி.முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு அலுவலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி சுபாசினி பார்த்தீபன் ஆகியோர் நிலைமாறு நீதி தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.
இதில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாதர் சங்கம், ஓட்டமாவடி அமரா பெண்கள் சங்கம், கல்லடி மாதர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், விழுது உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.
நிலைமாறுகால நீதியினை வலியுறுத்தியும், நல்லிணக்க பொறி முறையினை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தினத்தில் நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டின் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், மௌனத்தினை உடைத்தல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல், நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பனவற்றுக்கான தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமானது, நிலைமாறு கால நிதி தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சம்பந்தமாக தெற்கு, வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் அனுபவப் பகிர்வுச் செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது.
அதே போன்று கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய விபரங்கள் திரட்டுதல், பரிந்துரைச் செயற்பாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
வியாழன், 24 மார்ச், 2016
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் சுயதொழிலுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு
பிரதியமைச்சர் அமீரலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பதிலடி.
அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீரலி அவர்கள். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக் கொட்டியிருந்தார். அதற்காக நாம் அவரைப் போல் ஆத்திரப்படாமல் அறிவு பூர்வமாக பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமைப்பாட்டினை கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் நாம் பிரதியமைச்சர் அமீரலியைப் போல் சிந்திக்காமல் அவரது கட்சியையோ, அவர் சார்ந்த எமது சகோதரர்களான முஸ்லிம் சமுகத்தையோ நோகடிக்க விரும்பவில்லை.. அவரது தனிப்பட்ட கருத்துகளை அவசரமான கருத்துக்களாக கருதி அவருக்கு மாத்திரம் பதிலளிக்க விரும்புகிறோம்.
கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா
மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா நிகழ்வு கடந்த 22.03.2016 பங்குத்தந்தை ரொஷான் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிதாக திறந்துவைக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை ஜோசெப் மேரி அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது .
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியினை இயேசு சபை துறவி அருட்தந்தை யோன் ஜோசப் மேரி, பங்கு தந்தையும் இயேசு சபை துறவியுமான ரொஷான் , இருதயபுரம் பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து திருப்பலியினை ஒப்புகொடுத்தனர் .
இவ்விசேட திருப்பலியில் பங்கு சபையினரும், பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர்
மட்டக்களப்பு வந்தாறுமூலை நீர்முக விநாயகர் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா
(சித்தாண்டி நிருபர் & மூலையூரான்)
மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ நீர்முக விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ-பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 03ஆம்திகதி கும்பாபிசேகம் இடம் பெறவுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ நீர்முக விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ-பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 03ஆம்திகதி கும்பாபிசேகம் இடம் பெறவுள்ளது.























