வெள்ளி, 25 மார்ச், 2016

மகிழூர் கிராமத்தில் சிரமதான நிகழ்வு



(இ.சுதா)

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய வர்த்தக வணிக துறை அமைச்சின் நிபுணத்தவ ஆலோசகருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டிலும் இமகிழுர் கிராம ஆலயங்களின் ஒத்துழைப்புடனும் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை காலை7மணி முதல் 11 மணிவரை மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழூர் கிராமத்தில் நடைபெற்றது.

சிரமதான நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரின் செயலாளர் எஸ்.சிறிகரன் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸார் இகிராம சேவை உத்தியோகத்தர்கள் இசமூத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மகிழுர் பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இ.தவநேசன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பொது மயானம் உட்பட வைத்தியசாலைஇ கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடம் இஆலயங்கள் சிரமதானம் மூலமாக துப்பரவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate