திங்கள், 7 மார்ச், 2016

சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வள்ளுவர் குரு பூசை

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டு கோளுக்கமைய சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்டு வரும் காளிகா அறநெறி பாடசாலையினால் நேற்று(6) திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிக்கபட்டது. ஆலயத்தின் தலைவரும் காளிகா அறநெறி பாடசாiலையின் பொறுப்பாசிரியருமான ஆறுமுகம் தேவராசா தலைமையில் நடைபெற்றது.


நடைபெற்ற நிகழ்வில் ஆலயத்தின் நித்திய குரு து. சத்தியநாதன் ஐயா மற்றும் ஆலய பொருளாளர் ம.பாஸ்கரன் மற்றும் R.D.B வங்கியின் பிரதி முகாமையாளரும் ஆலயத்தின் அறப்பணி நிதியத்தின் நிதியப் பொறுப்பாளருமான பிரமானந்தராஜா அறநெறி பாடசாலை ஆசிரியைகளான விக்னேஸ்வரி மற்றும் ரம்யா உட்பட மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் காளிகா அறநெறி பாடசாலை மாணவர்களினால் திருக்குறள் ஓதுதல் மற்றும் திருவள்ளுவரின் பெருமை தொடர்பான பேச்சு என்பன இடம்பெற்றது. போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு ஆலய அறப்பணி நிதியத்தினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate