திங்கள், 21 மார்ச், 2016

தேனாமிர்தம் இறுவட்டு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வெளியீடு

இலங்கையின் மிக உயரமான விநாயகர் சுதைவிக்கிர இராஜகோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் புழக்பாடும் பாடல்கள் அடங்கிய இறுவட்டு கடந்த வெள்ளிக்கிழமை (18.03.2016) அன்று காலை 11.30 மணியளவில் ஆலய முன்றலில் இடம் பெற்றது.இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் அர்களும்,மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரேத்தினம் அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டன்ர்.


தேனாமிர்தம் இறுவட்டு தென்இந்திய பாடகர்களாக பி.உன்னிகிஷ;ணன்,ரி.எல்.மகாதேவன் மற்றும் நித்தியசிறி மகாதேவன் ஆகியோரும் அத்துடன் தேற்றாத்திவினை சேர்ந்த ச.இன்பராஜன், சி.கிருசாந்தன் மற்றும் சி.அருணன் ஆகியோரும் பாடல் பாடி இருந்தனர்.இதற்க்கு பாடல் வரிகளை தேனுரான், ஆ.அரசரெத்தினம், தெ.கந்தப்பன், சி.கோபவிந்தசாமி, ச.இன்பராஜன் மற்றும் வே.பகிரதன்; ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருந்தனர். இவ் இறுவட்டினை தேற்றாத்தீவினை பிறப்படமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட செல்லையா இதயநாதன் தயாரித்து இருந்தார்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate