புதன், 4 மே, 2016

நீண்டகாலமாக குடிநீர் இல்லா கிராமத்துக்கு குடிநீர்

மட்டக்களப்பு,வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்களுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்வியாழேந்திரன்(அமல்) பொதுக்கிணறு ஒன்றினை பெற்றுக்கொடுத்தார்.

கடந்த மாதம் இக் கிராமத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மக்களை பார்வையிடுகையில் மக்கள் தமக்கு கிணறு ஒன்றை பெற்றுத்தருமாறு வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதக்கமைய இக் கிணற்றை பெற்றுக்கொடுத்தார்.

இந் நிதியுதவினை கனடிய தேசத்தில் இருந்து வருகைதந்த கனடாவாழ் தமிழ் உறவாகிய திருமதி. ம.புஸ்பலதா அவர்களின் நிதி உதவியுடன் மனித நேயக்கரங்களின் அமைப்பின் அமுலாக்கத்தின் கீழ் இக் கிராம மக்களுக்கு கிணறு வழங்கப்பட்டது.

வறட்சியான காலநிலை காரணமாக கடும் நீர்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்த கிணறு பெரும் வரப்பிரசாதம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate