யுத்தம் ஓய்ந்து விட்டது வடகிழக்கு சந்திப்புகளை நடத்துவதற்கு தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்குக்கும் கிழக்க்குக்கும் உள்ள இணைப்பை மீண்டும் மேன்படுத்தி அதன்மூலம் ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார்.
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
மண்டூர் 14 பாடசாலையில் இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எல்லைப்புற கிராமமான கணேசபுரம் மண்டூர் 14 அ.த.க.பாடசாலையில் இரண்டுமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் சி.புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது.
ஆசிரிய இடமாற்றத்தினை தடுப்பதற்கு மாகாண சபை உறுப்பினர் துணைபோகின்றார். அதிபர் விசனம். மறுக்கின்றார் மாகாண சபை உறுப்பினர்.
(பழுகாமம் நிருபர்)
எமது பாடசாலைக்கு; இடமாற்றம் பெற்று வரவிருந்த ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான ஆசிரியர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மேற்கொண்டு வருவது கவலைக்குரிய விடயம் என மண்டூர் 14 அ.த.க பாடசாலையின் அதிபர் சி.புஸ்பராசா பகிரங்கமாக தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட
கணித பாடத்திற்கு 30 ஆசிரியர் வெற்றிடம். பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்.
எமது கல்வி வலயத்திற்கு 30 கணித பாட ஆசிரியர்கள் தேவையாக உள்ளது என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். மண்டூர் 14 சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்இ
எமது வலயத்தில் உள்ள எல்லைப்புற பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சர் அவர்கள் விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்களை நியமித்துள்ளமையினால்
மண்டூர் 14 சக்தி வித்தியாலயம் என பெயர்மாற்றம்
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயர் மண்டூர் 14 சக்தி வித்தியாலயம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாகாண கல்விப் பணிப்பாளரின் 06.01.2017 திகதிய சிபார்சுக்கமைவாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் சி.புஸ்பராசா தெரிவித்தார். இப்பெயரை
திங்கள், 27 பிப்ரவரி, 2017
மகிழூரில் பிரதேசசெயலாளர் கலாநிதி மூ.கோபலரெத்தினத்திற்குசேவைநலன் பாராட்டுவிழா.
மண்முனைதென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் 2014ம் ஆண்டு பிரதேச செயலாளராக பதிவியேற்று இதுவரைகாலம் வரை மிகவும் அர்ப்பணிப்பான சேவையாற்றி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பின்தங்கிய கிராமங்களின் உட்கட்டமைப்புவசதிகளின் அபிவிருத்தி மற்றும் கல்வி,வழவாதார அபிவிருத்திகளிற்காய்பெரும் சேவையாற்றி நிதியமைச்சினுள் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017
மட்டக்களப்பு பொலிஸாரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம்
நல்லாட்சி அரசாங்கத்தின் மட்டக்களப்பு பொலிஸாரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தள்ளார். மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற காணி மறுசீரமைப்பு பிரதி ஆணையாளர் மீதான துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து இன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலையடியில் பட்டிருப்பு தொகுதி தமிழ் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மட்டக்களப்பு பொலிஸாரை நான் வன்மையாக
கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரின் செய்தி மனதை நெகிழ வைக்கின்றது. மட்டு. வலயக்கல்வி பணிப்பாளர் கவலை
கிழக்கு மாகாண சபையின் 79வது கூட்டத்தொடர் கடந்த 22.02.2017ம் திகதி சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆரையம்பதி மகா வித்தியாலய பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வருகின்ற வளங்களை சூறையாடுகின்றது. இதற்கு
தமிழ் அரசியல்வாதிகளிடையே இன்று ஒற்றுமை தேவை. பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்.
தமிழ் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை நிலையானது இன்று காலத்தின்கட்டாய தேவையாக உள்ளது என பட்டிருப்புத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் நிலை தொடர்பாக தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் வாதிகளிடையே தற்போது
திக்கோடையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி 25.02.2017ம் திகதி பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாகாண சபை
சனி, 25 பிப்ரவரி, 2017
வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய சித்தாண்டி வானவில் விளையாட்டு அணி
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை - கஜமுகன் கழகத்தினால் நடாத்தப்பட்ட 2017ம் ஆண்டுக்கான சசிந்திரன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் நேற்று (24) முறக்கொட்டான்சேனை கஜமுகா விளையாட்டுத் திடலில் சித்தாண்டி வானவில் விளையாட்டு அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைபப்ற்றியது.குறித்த ஞாபகார்த்த கிண்ண கிரிகற் சுற்றுப் போட்டியில் அணிகள் தெரிவு செய்யப்பட்டு அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதன்போது சித்தாண்டி வானவில் கிறிக்கற் அணி நீலத்தாரகை இரண்டு அணிகளும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய நிலையில் போட்டிகள் பலத்த பலப்பரீட்சைக்கு மத்தியில் நடைபெற்றது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் காட்டுயானை தாக்கிய பாடசாலைக்கு உதவி
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
செவ்வாய், 21 பிப்ரவரி, 2017
மட்டு போரதீவு வீதி புனரமைக்கப்பட்டு 50 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் மீள்புனரமைப்பு. இது நீடிக்குமா? மக்கள் விசனம்.
மட்டக்களப்பு பெரிய போரதீவு – பழுகாமம் வீதி தற்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அபிவிருத்தி மகளிர் விவகாரம் திறன் அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியானது கடந்த 28.12.2016ம் திகதி அவசர வேலையாக முடி;கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டு - தும்பங்கேணி வீதியில் விபத்து. இளைஞன் படுகாயம்.
தும்பங்கேணி வீதியில் நேற்று(20) இடம்பெற்ற வீதி விபத்தில் பழுகாமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அரசரெத்தினம் விஜிதரன் எனபவர் இந்த வீதி விபத்தில் படுhயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
சனி, 18 பிப்ரவரி, 2017
பிரதேச செயலாள மூ.கோபாலரெத்தினம் அவர்களுக்கு பிரியாவிடை - தேற்றாத்தீவில்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கடமை புரிந்து பதவி உயர் பெற்று செல்லும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களை தேற்றாத்தீவு பொது மக்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(18.02.2017) சனிக்கிழமை தேற்றாத்தீவு தெற்கு பல் தேவை கட்டட மண்டபத்தில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது.
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
வாசம் உதவும் உறவுகளினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பின் வாசம் உதவும் உறவுகள் அமைப்பால் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலையின் ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், மண்டூர் 40 அ.த.க.பாடசாலையில் ஒரு மாணவிக்கு துவிச்சக்கர வண்டியும், 35 மாணவர்களுக்கு புத்தகப்பையும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை
புதன், 15 பிப்ரவரி, 2017
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி அன்று அடியார்கள் உயிர்லிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணும் வாய்ப்பு
மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 2017.02.24(வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளன.அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.
திங்கள், 13 பிப்ரவரி, 2017
சனி, 11 பிப்ரவரி, 2017
திலங்க சுமிதிபால உதயம் விளையாட்டுக்கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகை
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரும்,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதி சபாநாயகரும்மாக பாராளுமன்ற உறுப்பினரும்மான திலங்க சுமிதிபால அவர்கள் நேற்று(10.02.2017) வெள்ளிக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திற்கு முன்னால் தொட்டத்தடி வளாகத்திற்கு வருகைதற்தார் இவரை தேற்றாத்தீவு உதயம் கழகத்தின் உறுப்பினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
வெள்ளி, 10 பிப்ரவரி, 2017
தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த மாணவி பரிதாபகமாக உயிரிழப்பு களுதாவளை தேற்றாத்தீவு எல்லைவீதியில் சம்பவம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை எல்லை வீதியில் மனோகரன் ஹலுக்சனா வயது(14) எனும் பாடசாலை மாணவி நேற்று(09.02.2017) வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சமயம் குடும்பத்தினரால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக தெரிய வருகின்றது.
இந்துமதம் அழிந்துகொண்டு செல்கின்றது. மாகாண சபை உறுப்பினர் ஜனா
(பழுகாமம் நிருபர்)
இந்து மதம் அழிந்து கொண்டும், தேய்வடைந்தும் கொண்டும் செல்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மன்றத்தின் பொங்கல் விழா நிகழ்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.,
எமது பிரதேசத்தில் இந்து மதம் அழிந்து கொண்டும், தேய்வடைந்தும் கொண்டும் செல்கின்றது
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்க்கட்சியின் பக்கம் அமரவும் தயங்க மாட்டோம். மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை
கிழக்கு மாகாண சபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அபிவிருத்தி சட்டமூலத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் அமரவும் தயங்க மாட்டோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை(வெள்ளிமலை) தெரிவித்தார். கடந்த 05.02.2017ம் திகதி திருப்பழுகாமத்தில் இடம்பெற்ற இந்து கலா மன்றத்தின் பொங்கல் விழா
மட்டக்களப்பில் இடம்பெற்ற எழுக தமிழ்.
கிழக்கின் எழுக தமிழ் இன்று மட்டக்களப்பில் உணர்ச்சி பூர்வமாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கல்லடி மணிக்கூண்டுக் கோபுரத்தடியில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணி மைதானம் வரை நடைபவனியாக மக்கள் சென்றனர். இங்கு ஈகைச்சுடரேற்றலுடனும்,
புதன், 8 பிப்ரவரி, 2017
ஒருவரை அடித்து காயப்படுத்திய மூன்று பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வருட கடூழியச்சிறைத்தண்டனை
புதுக்குடியிப்பு எனும் இடத்தில் வைத்து விபுலாந்த வீதி புதுக்குடியிருப்பு எனும் விலாசத்தை சார்ந்த 56 வயதுடைய கணபிதிப்பிள்ளை மகேந்திரன் என்பருக்கு அடித்து காயமேற்படுத்தியமை சம்பந்தமான வழக்கில் மூன்று எதிரிகளுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுளார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராஜா உத்தரிவிட்டுள்ளார்.
திருட்டு குற்றசாட்டில் ஈடுபட்ட மூவருக்கு ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச்சிறைத்தண்டனை
மதுராபுரம் தாழங்குடா பகுதியில் முத்துலிங்கம் என்பவரின் வீடடினுள் அத்துமீறி புகுந்து 28,000 ரூபா பெறுமதியாக தொலைக்காட்சி பொட்டிஒன்றை களவாடியது எதிரிகள் மூவருக்கும் ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்ட்ட ஒரு வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கியதுடன் கைபற்றப்பபட்ட களவாடப்பட்ட பொருட்களை முறைப்பாட்டாளிடம் கையளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராஜா உத்தரிவிட்டுள்ளார்.
திங்கள், 6 பிப்ரவரி, 2017
பழுகாமத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா
மட்டக்களப்பு பழுகாமம் இந்துகலா மன்றத்தினால் நேற்று(05) தலைவர் த.குகன் தலைமையில் திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோவிந்தன்
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் போரதீவுப்பற்று கோட்ட அதிபர்களுக்கு RAINCOATவழங்கி வைப்பு.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்றுக் கோட்ட அதிபர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் RAINCOAT இன்று(06) வழங்கி வைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017
போரதீவுப்பற்று பிரதேச சபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு
இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச சபையில் இன்று (04) பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தன் அவர்களின் தலைமையில் போரதீவுபற்று பிரதேச சபை செயலகத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து பிரதேச சபை செயலக வளாகத்தினுள் சிரமதானப்பணியும் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு
இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (04) பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் போரதீவுபற்று கலாசார மத்திய நிலையத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து இரத்தான நிகழ்வும், பிரதேச
சனி, 4 பிப்ரவரி, 2017
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 69 வது சுதந்திர தினம்
இலங்கையின் 69 வது சுதந்திர தினம் இன்று(04) சனிக்கிழமை கொண்டாடப்படுகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச காரிரியாலயங்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. அந்த வகையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளை இங்கு காணலாம்.
வெள்ளி, 3 பிப்ரவரி, 2017
வெள்ளத்தினால் துர்ந்து போன ஆனைகட்டியவெளி – மண்டூர் பாதை புனநிர்மானம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆனைகட்டியவெளி – மண்டூர் செல்லும் விவசாய வீதியானது கடந்த வெள்ளஅனர்த்தினால் பயன்பாட்டிற்கு உதவாத முறையில் துர்ந்து போயிருந்தது. இதனை போரதீவுப்பற்று பிரதேச சபையினர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்தனர்.
வியாழன், 2 பிப்ரவரி, 2017
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக கருதப்படும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதிகள் நேற்று(01.02.2017) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.2011ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பினையேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்துசென்றிருந்தார்.






























