செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மண்டூர் 14 சக்தி வித்தியாலயம் என பெயர்மாற்றம்

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயர் மண்டூர் 14 சக்தி வித்தியாலயம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாகாண  கல்விப் பணிப்பாளரின் 06.01.2017 திகதிய சிபார்சுக்கமைவாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால்  இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் சி.புஸ்பராசா தெரிவித்தார். இப்பெயரை
உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களினால் இப்பாடசாலையின் அடிக்கல் நடும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் இப்பெயர்மாற்றம்  துரிதமாக மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate