சனி, 18 பிப்ரவரி, 2017

பிரதேச செயலாள மூ.கோபாலரெத்தினம் அவர்களுக்கு பிரியாவிடை - தேற்றாத்தீவில்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கடமை புரிந்து பதவி உயர் பெற்று செல்லும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களை தேற்றாத்தீவு பொது மக்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(18.02.2017) சனிக்கிழமை தேற்றாத்தீவு தெற்கு பல் தேவை கட்டட மண்டபத்தில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெற்றது.


இவ் நிகழ்வில் தேற்றாத்தீவின் ஆலய பரிபான சபை உறுப்பினர்கள் ஆலய வண்ணக்குமார்கள் மன்றங்கள்,சங்கங்கள்,கழகங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது பிரதேச செயலாளர் பிரதேசம் மற்றும் தேற்றாத்தீவு கிராமத்திற்கு ஆற்றிய பணிகள் பற்றி பொது மக்கள்  உரையாற்றியதுடன் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன் பாரட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate