வெள்ளி, 3 ஜூன், 2016

மட்டக்களப்பில் ஆவணப்பட செயலமர்வு


ஆவணப்படம் மற்றும் குறும்படம் தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறையொன்று நாளை 04.06.2016 காலை 9 மணியளவில் வொய்ஸ் ஒவ் மீடியா வலையமைப்பின் மட்டக்களப்பு ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.






இந்திய திரைத்துறையில் பணியாற்றுபவரும், இலங்கையைச்சேர்ந்த ஆவணப்பட இயக்குநருமாகிய எஸ்.சோமிதரன்  இந்த செயலமர்வில் பங்கேற்கவுள்ளார். இச் செயலமர்வில் ஆவணப்பட மற்றும் குறும்பட படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மாணவர்கள் ஆர்வமுள்ளவர்கள் எவரும் கலந்துகொள்ளலாம். கருத்துருவாக்கம், திரைக்கதை, தயாரிப்பு, ஆவணப்பட அறிமுகம், மற்றும் குறுப்பட தயாரிப்பு போன்ற விடயங்களில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா மைதானத்திற்கு எதிரில்உள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.பங்குபற்ற விரும்புபவர்கள் 065 222 2832, 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தமது விபரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

VOICE of MEDIA NETWORK
BRANCH                                   
294, New Kalmunai Road, Kallady, Nochchimunai, Batticaloa
Mobile: +94 (0) 71 2164061 Tel: +94 (0)65 2222832 
FACEBOOK: voicemediasrilanka / TWITTER: @voicemedialanka
HEAD OFFICE  
88-1/1 Wattarapola Road, Mt- Laviniya  


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624956

Translate