வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மட்டு நகரின் மாபெரும் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்

மட்டுநகரில் சுமார் 40 வருடகாலமாக விளையாட்டு துறையில் முன்னனி வகிக்கும் கழகங்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சிவானந்தா விளையாட்டு கழகமும் திகழ்வதை மட்டக்களப்பு மக்கள் அறிவார்கள்.

இக்கழகங்களில் இருந்து தமது திறமையை வெளிக்கொணர்ந்த பல வீரர்கள் தற்போது இலங்கையிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உயர்பதவிகளை வகிப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே இவ்விரு கழகங்களும் தங்களிடையே இருக்கும் உறவை நட்பு ரீதியாக எப்பொழுதும் ஒரு ஒன்றிப்பான கழகங்களாக செயற்பட்டு வருவதை நாம் பல இடங்களில் அவதானிக்க கூடிதாக உள்ளது. 

இந்த நட்பின் செயற்பாடாகவே சிவானந்தா விளையாட்டு கழகமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சினேகபூர்வமான ஒரு கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருடந்தோரும் மிக சிறப்பாக நடாத்தி வருகின்றது, இதன் முதல் போட்டினது 2009ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும், இந்த நட்பு ரீதின கிரிக்கெட் போட்டிக்கு மட்டுநகரை முதன்னிலைப்படுத்தி ஒரு பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியவுடன் வைக்கப்பட்ட பெயர் தான் Battle of Batti  ஆகும் இந்த மாபெரும் கிரிக்கெட் சமரின் பிதாமகன் யார் என்று உங்களுக்கு தெரியுமா?; அவர் தான் எம்மை விட்டு மறைந்த சிவானந்தா விளையாட்டு கழக வீரரான அமரர்.தனபால். அமரர்.தனபால்; 2009ம் ஆண்டு நடைபெற்ற இம்முதல் தொடரில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

   அதன் பின் இத்தொடரை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.பிரகாஸ் அவர்களின் ஞாபகார்த்தமாகவும், சிவானந்தா விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.தனபால் அவர்களின் ஞாபகாத்தமாகவும் தற்போது நடைபெற்று வருகின்றது கடந்த வருடம் இச்சமர் சமநிலையில் முடிவுற்றது, இவ்வருடமும் 9வது தடவையாக மிக சிறப்பாக நடைபெற்றவுள்ளது. இனி கழகங்கள் பற்றி அறிந்து கொள்வோம்

கோட்டைமுனை விளையாட்டு கழகம்  - 1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் அக்காலத்தில் கோட்டைமுனை மகாவித்தியாலத்தில் கல்வி பயின்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட கழகமாகும். கிரிக்கெட் விளையாட்டையே பிரதானமாக கொண்ட இக்ககழகம் பிற்காலத்தில் உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்து சாதனை படைத்துள்ளது. இச்சமரில் இவ்வருடம் கலந்து கொள்ளும் அணிக்கு தலைவராக லஜிகுமார அவர்கள் செயற்படவுள்ளார். 

இக்கழக வீரர்களை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் தற்காலத்தில் பிரகாசித்து வரும் வினோhதனை குறிப்பிடலாம் அவர் அன்மையில் கல்லாறு விளையாட்டு கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்து குறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் பாடசாலை மட்டப்போட்டிகளில் 206 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அஸ்லியும் இக்கழகத்திற்கு பக்கபலமாக இருப்பதுடன், அணித்தலைவரும் விக்கெட்காப்பாருமான லஜிகுமார அவர்களையும், சகலதுறை ஆட்டக்காரர் டெனிக் அவர்களையும் கோட்டைமுணை விளையாட்டு கழகம் நம்பியுள்ளது எனலாம். பந்து வீச்சில் அன்மையில் கல்லாறு விளையாட்டு கழகத்துடன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சுழல் பந்து வீச்சாளர் டிலக்சன், வேகப்பந்து வீச்சாளர் சாரு மற்றும் அனுபவசாலியான யது அவர்களையும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இம்முறை தாம் வெற்றி கொண்டு கின்னத்தை தனதாக்கி கொள்வதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ரெட்ணராஜ் தெரிவித்துள்ளார்.

சிவானந்தா விளையாட்டு கழகம் - 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் சிவானந்தா தேசிய பாடசாலை வீரர்களையே பிரதானமாக கொண்டு செயற்பட்டு வரும் ஒரு கழகமாகும். ஆரம்ப காலங்களில் உதைபந்தாட்டத்தில் தம்மை நிலை நிறுத்தினாலும் பிற்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கும் முன்னுரிமை வழங்கி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இச்சமரில் கலந்து கொள்ளும் அணிக்கு தலைவராக ஜெனிசிஸ் அவர்கள் செயற்படவுள்ளார். வீரர்களை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் தனக்கே உரிய பாணில்  பிரகாசித்து வரும் அனோஜன் விரைவாக ஓட்டம் பெறக்கூடிய பிரசாத் மற்றும் ஜினேந்திரா போன்றோரை குறிப்பிடலாம் பந்து வீச்சில் அனுபவ வீரரான சுழல் பந்து வீச்சாளர் கனிஸ்டனை சிவானந்தா விளாட்டு கழகம் முழுமையாக நம்பியுள்ளது மற்றும் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை சிலக்சன், நிரோசன் போன்றேரையும் இக்கழகம் நம்பியுள்ளதாக அணியின் பயிற்சிசாளர் வில்லி பிரான்ட் தெரிவித்ததோடு இம்முறை தாம் வெற்றி கொள்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

இத்தொடரானது இரு கழகங்களையும் இணைக்கும் ஒரு உறவு பாலமாக இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது எனவே எதிர்வரும் 20,21,22 (சனி,ஞாயிறு,திங்கள்) ஆகிய தினங்களில் சிவானந்தா விளையாட்டு மைதனத்தில் மிக சிறப்பாக சிவானந்த விளையாட்டு கழகம் நடாhத்தவுள்ளது எனவே சகல இரு கழக வீரர்களையும் ஒன்று கூடுமாறும் வீரர்களுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
பாலசிங்கம் ஜெயதாசன்
செயலாளர்
கோட்டைமுணை விளையாட்டு கழகம்



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624966

Translate