புதன், 3 பிப்ரவரி, 2016

கொக்குவில் சக்தி அறநெறிப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கொக்குவில் சக்தி அறநெறிப் பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழா கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

அறநெறிப் பாடசாலை அதிபர் க.ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே.பகிரதன், ஆயுள்வேத சித்த வைத்தியரும், யோகா ஆசிரியருமான சி.ராஜேந்தர், கொக்குவில் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.டொமினிக் வல்தசார், மதகுரு சிவஸ்ரீ.வே.பொன்னுத்துரை குருக்கள், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், கடந்த வருடம் அறநெறிப் பாடசாலையால் நடாத்தப்பட்ட இந்து சமயப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate