மட்டக்களப்பு குறுமண்வெளியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சவுதி அரேபியாவில் மாரடைப்பினால் மரணடைந்துள்ளார். பல காலமாக சவுதிஅரேபியாவில் தொழில் புரிந்து வந்த இவர் ஒரு மாத கால விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறையை வீட்டாருடன் கழித்த இவர் சென்ற வாரமே மீண்டும் சவுதி அரேபியா சென்றிருந்தார். இந்நிலையிவையே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மாணிக்கபோடி தங்கராசா (வயசு 52) நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவரின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக